உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், நாம் கவனத்தில் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயம் உணவு மட்டுமே. ஆரோக்கியத்திற்கும் நன்மை தந்து உடல் எடையையும் குறைக்கும் சில உணவுகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் ஆப்பிள் சைடர் வினிகர். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைப்பதில் ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் சிறப்பான வேலையை செய்கிறது.
உணவுகள் மீது உங்களுக்கு உள்ள ஆசையை ஆப்பிள் சைடர் வினிகர் குறைக்கிறது. அது மட்டுமல்லாமல், இதில் மெக்னீசியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், அமினோ அமிலம் மற்றும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டங்கள் நிறைந்து உள்ளன. இதை பல விதமான முறைகளில் நாம் உட்கொள்ளலாம். மத்திய அரசு மருத்துவமனையான ESICயின் உணவியல் நிபுணர் ரிது பூரி அவர்கள் ஆப்பிள் சைடர் வினிகர் உட்கொள்வதால் நம் உடல் எடையை எப்படி குறைக்க முடியும் என்று இந்த கட்டுரையில் கூறியுள்ளார்.
இதுவும் உதவலாம்:காலையில் இந்த 6 விஷயங்களை மட்டும் செய்தால் போதும், உடல் எடை மிக வேகமாகக் குறையும் தெரியுமா!
ஆப்பிள் சைடர் வினிகரை நாம் காலையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சிறந்த டீடாக்ஸ் பானமாகும். இதற்கு முதலில் ஒரு கப் நீரை சுட வைத்து ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை அதில் சேர்த்து கலக்கி விடவும். இப்போது இந்த டீடாக்ஸ் பானத்தை குடிக்கலாம்.
உடல் எடையை குறைக்க பல்வேறு டீ வகைகளை குடிக்க விரும்புகிறோம். நீங்கள் விரும்பினால், ஆப்பிள் சைடர் வினிகரை டீயுடன் கலந்து பருகலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் கிரீன் டீ வீட்டில் தயாரித்து, அதில் ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம். இந்த டீயை நீங்கள் சூடாகவும் குடிக்கலாம் அல்லது குளிர வைத்தும் குடிக்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகரை கொண்டு ஊட்டசத்து நிறைந்த சிறப்பான ஒரு டானிக் கூட செய்யலாம். இதற்கு ஆப்பிள் சைடர் வினிகரை எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கப் ஏதாவது ஒரு பழச்சாறுடன் கலக்கவும். இதன் மூலம் உங்களுக்கு பழம் மற்றும் வினிகர் இரண்டின் பலனும் கிடைத்து விடும். தேவைபட்டால் இதில் இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு தூள் மற்றும் தேன் சேர்த்து பருகலாம்.
சாலட்களை அலங்கரிக்கும் போது, ஆப்பிள் சைடர் வினிகருடன் ஆலிவ் எண்ணெயை கலக்க வேண்டும். இது உங்கள் சாலட்டின் சுவையை மட்டும் கூட்டும் கலவை அல்ல, உங்கள் உடல் எடையை குறைக்க போகும் கலவை ஆகும்.
இதுவும் உதவலாம்:15 நிமிடத்தில் தொப்பையை ஒல்லி பெல்லியாக மாற்ற வேண்டுமா?
நீங்கள் உடல் எடை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தும் போது சில சிறு சிறு விஷயங்களின் மீது கவனம் வைக்கவும். அதாவது -
குறிப்பு: உங்களுக்கு உடல்நிலை சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினை இருந்தால், ஆப்பிள் சைடர் வினிகரை சாப்பிடுவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]