நீங்கள் உங்கள் தொப்பை வயிற்றைக் குறைக்க விரும்பினால், இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
யாருக்காவது தன்னுடைய தொப்பை சதை தொங்கிக் கொண்டு இருந்தால் பிடிக்குமா? ஆனால் இன்றைய சூழலில் நாம் அனைவரும் அதைத் தான் எதிர்கொண்டு வருகிறோம். ஏனென்றால் நாம் அனைவரும் உட்கார்ந்து செய்யும் வேலைகளை தான் செய்கிறோம். இதனால் நம் உடலின் செயல்பாட்டுத் தன்மை குறைந்து விடுகிறது. சிலர் இதைச் சரி செய்ய உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று வருகின்றனர். சிலரோ காலையிலும் மாலையிலும் ஜாக்கிங் செல்கின்றனர். எப்படியிருந்தாலும், நாம் கச்சிதமான உடற்கட்டுடன் இருக்க, அதிகப்படியான எடையைக் குறைக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் சில சமயம், நமக்கு உடற்பயிற்சியோ, யோகாவோ செய்ய நேரம் இருப்பதில்லை, அப்படியே நேரம் இருந்தாலும், அதிக எடை கொண்ட நம் உடலினை வளைப்பது கொஞ்சம் சிரமமான காரியம் ஆகி விடுகிறது. நீங்களும் இதே பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
இன்று நாங்கள் உங்களுக்கு சில விதமான உடற்பயிற்சிகளை அறிமுகப்படுத்துகிறோம், இவற்றை நீங்கள் தினசரி செய்யலாம் என்று நிபுணர் டாக்டர். ஹிதேஷ் குரானா கூறுகிறார். இவர் ஒரு சைரோபிராக்டிக், எர்கோனாமிக்ஸ் நிபுணர் மற்றும் சீனியர் பிசியோதெரபிஸ்ட் ஆவார். இனி நாம் உடற்பயிற்சி பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வர, நம் தசைகள் அனைத்தும் வலுவடையும். அதன் நெகிழ்வுத் தன்மையும் அப்படியே இருக்கும். க்ரஞ்ச்சஸ் உங்கள் தொப்பையைக் கரைத்து விடுகிறது, வயிற்றுப் பகுதியை சீராக வைத்து, இடுப்பு பகுதியை மெலிதாக மாற்றுகிறது.
உங்களுக்கு இரத்த கொதிப்பு பிரச்சனை இருந்தால், இதைச் செய்யும் போது சீரான இரத்த ஓட்டம் உண்டாகும். இதை செய்ய, நீங்கள் அதிகப்படியாக எதையும் செய்ய வேண்டாம், பின்வரும் வழிகளைப் பின்பற்றி வந்தால் போதும்
புஷ் அப் உடற்பயிற்சி
உங்கள் தொப்பை வயிற்றைக் குறைக்க, சுவற்றின் மீது இந்த உடற்பயிற்சியைத் தினமும் செய்யலாம். இந்த உடற்பயிற்சி நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இதைச் செய்யும் போது, நம் மார்பு மற்றும் கழுத்து பகுதிக்கு நல்ல பயனைத் தருகிறது. இதனால் நம் இடுப்பு பகுதி கட்டுக்கோப்பாக மாறுகிறது.
இதை எப்படிச் செய்வது ?
இந்த பதிவும் உதவலாம்:குளிர்காலத்தில் எலும்பை வலுப்படுத்தும் உணவுகள் எது தெரியுமா?
குறிப்பு - உங்களுக்கு ஏதேனும் உடல்நல கோளாறு இருந்தால், ஒரு நிபுணர் ஆலோசனை பெற்று விட்டு, இந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம். மேலும் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்துத் தான், இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்குப் பயனைத் தரும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Images Credit : Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]