நம் உடலுக்கு தினசரி 1000 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியத்துடன், மெக்னீசியம், வைட்டமின்-A, வைட்டமின்-D போன்றவையும் தேவை. பால் குடிப்பதும், சூரிய ஒளியில் உட்காருவதும் எலும்பு பிரச்சனைகளை தீர்க்கும் என்பது நாம் அறிந்ததே, ஆனால் எலும்பு பலத்திற்கு இது மட்டுமே போதாது. எலும்பின் அடர்த்தியை தக்க வைத்து, எலும்புகளை தேய்மானம் இல்லாமல் பாதுகாக்க, பல விதமான உணவுகளை தினசரி உணவுமுறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுக்கலை நிபுணர் அஞ்சலி முகர்ஜி எலும்புகளை பலமாக்கும் சில உணவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் மிஸ் இந்தியா போட்டியாளர்களுக்கு பயிற்சி தரும் பயிற்சியாளர் ஆவார். அஞ்சலி இந்த துறையில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பணி புரிந்து வருகிறார்.
இந்த பதிவும் உதவலாம்:உங்கள் மஞ்சள் பற்கள் முத்து போல் ஜொலிக்க வேண்டுமா?
கேரட் மற்றும் கீரை
6 பச்சை கேரட் மற்றும் 50 கிராம் கீரையை தினமும் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான 300 மில்லி கிராம் அளவுள்ள கால்சியம் சத்து நமக்கு கிடைத்து விடும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது, மேலும் இதில் உள்ள சத்துக்கள் நம் சருமத்தை பொலிவாக மாற்றுகிறது.
எல்லா வகையான தானியங்களையும் உண்ணலாம்
பருப்பு வகைகளான ராஜ்மா பருப்பு, கொண்டைகடலை, கருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றில் 200 - 250 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கிறது. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு வாய்வு, பித்தம் அல்லது அஜீரண கோளாறு இருக்கும் பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு சேர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பொருட்கள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் வாய்வு தொல்லைகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.
வெள்ளை மற்றும் கருப்பு எள் சாப்பிடலாம்
2 - 3 டேபிள்ஸ்பூன் அளவு வெள்ளை மற்றும் கருப்பு எள்ளை உங்கள் உணவில் சேருங்கள். 100 கிராம் எள்ளில் 1400 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. நீங்கள் எள்ளில் சட்னி கூட செய்யலாம். குளிர் காலத்தில், எள்ளை உங்கள் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். ஆனால் ஒரேயடியாக அதிகமான எள்ளை உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல. அது உடலில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தி விடும்.
இந்த பதிவும் உதவலாம்:உடல் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும் உணவுகள் எவை தெரியுமா?
இந்த உணவு பொருட்கள் கால்சியத்தை அதிகரிக்கும்
உணவில் மத்தி மீன், பச்சை இலை காய்கறிகள், பிரக்கோலி, சோயாபீன், அத்தி மற்றும் தானியங்களை சேர்க்க வேண்டியது அவசியம். அதோடு பச்சை காய்கறிகள், கீரைகளை அதிகமாக சேருங்கள். குளிர் காலத்தில் பசலை, வெந்தய கீரை ஆகியவற்றை தினமும் சாப்பிட்டால் நல்லது. இதற்கு அதிக எண்ணெயோ அல்லது காரமோ சேர்க்காமல் இருப்பது நலம் பயக்கும். முடிந்தவரை, சாட்விக் உணவுகளை மட்டுமே உண்ணவும். இது உங்கள் எலும்புகளை பலமாக்கி, உடலில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நீக்கி விடும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation