உங்கள் மஞ்சள் பற்கள் முத்து போல் ஜொலிக்க வேண்டுமா?

மஞ்சள் நிற பற்களால் அவதிப்பட்டால் நிபுணர்கள் கூறியுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றி பயன் பெறுங்கள்

yellow teeth remedy

மஞ்சள் கறை பற்கள் என்பது ஆரோக்கியம் இல்லாத வாய் சுகாதாரத்தின் அறிகுறி என்ற தவறான எண்ணம் நம் மத்தியில் உள்ளது. சிலருக்கு இது உண்மையாக இருக்கலாம். ஆனால் சில ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் சில முக்கிய தகவல்களை நமக்கு தருகிறது. பற்களில் கரும்புள்ளி உள்ளவர்களுக்கு, பூச்சி பற்கள் அவ்வளவு எளிதில் வராதாம். அதே போல் வயது ஏற ஏற, முடி வெளுக்கும், உடல் மெலிந்து விடும், தோல் சுருங்கும், அதே போல் பற்கள் மஞ்சள் ஆவதும் இயற்கையான விஷயம்.

உண்மை என்னவென்றால், நல்ல வாய் சுகாதாரம் காப்பதும் மற்றும் பல் மருத்துவரிடம் அவ்வப்போது செக் அப் செய்வதும் வெண்மை பற்களுக்கான காரணமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஒரு பல் மருத்துவரால் மட்டுமே சிறந்த வெள்ளை நிற பற்களை நமக்கு கொடுக்க முடியும். ஆனால் தற்போது மார்கெட்டில் பற்களை வெண்மையாக வைத்திருக்கவும், பிரகாசிக்க செய்யவும் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை நாம் வசதியாக, எளிமையாக வீட்டிலேயே பயன்படுத்தலாம்.

yellow teeth

நீங்கள் டீ அல்லது காபி போன்ற பானங்களை அடிக்கடி குடிப்பவராகவோ அல்லது பற்களை பற்றிய அக்கறை இல்லாதவராகவோ இருந்தால், மஞ்சள் நிற கறைகள் உங்கள் பற்களை ஆக்ரமித்து கொள்ளுவது உறுதி. இந்த சூழ்நிலை நாம் சிரிக்கும் போதோ அல்லது புன்னகைக்கும் போதோ நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். வீட்டிலேயே சரியான தீர்வை பற்களுக்கு கொண்டு வர விரும்பினால், இங்கு சில வழிகள் இருக்கின்றன. டாக்டர் ராஜீவ் சிட்குப்பி, இவர் ICPA ஹெல்த் பிராடக்ட்ஸ் லிமிடெட் எனப்படும் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளராக இருக்கிறார். மஞ்சள் பற்களால் அவதிப்பட்டு வந்தால், நீங்கள் நிச்சயமாக நிபுணர்கள் கூறியுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றலாம்.

இதுவும் உதவலாம்:ஏன் விக்கல் வருகிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?

நிபுணர் கருத்து

டாக்டர் ராஜீவ் ஜீ சொல்வதாவது, ஒரே இரவில் பற்கள் மாறிவிடாது அல்லது முத்து போல பிரகாசிக்காது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஆம், பற்களில் உள்ள மஞ்சள் படலத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக தான் நீக்க முடியும். ஆனால் வாழ்க்கை முறையில் நாம் சில மாற்றங்கள் செய்வது தான் அவசியம்.

தினமும் இருமுறை பல் துலக்கவும்

teeth

நிபுணர் கூற்று, நம் துணியில் சாப்பாடு கறைகள் படிந்தால் எப்படி இருக்கிறதோ, அதே போல் தான் பற்களில் உள்ள கறைகளும் இருக்கும். அந்த கறையின் கடினத்தன்மை மற்றும் அது எத்தனை நாட்கள் இருக்கும் என்பது நாம் உண்ட உணவின் தன்மையை பொறுத்தது. அதனால் தினசரி இருமுறை பல் துலக்குவது மிக அவசியம்.

இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும் ஒரு சிலர் அடிப்படை விஷயங்களில் கூட கவனம் செலுத்த மாட்டார்கள். நீங்கள் தினமும் ஒரு 2 நிமிடமாவது பல் துலக்க வேண்டும், அப்படி துலக்கும் போது பல்லின் இடுக்குகளிலும் நன்கு சுத்தம் செய்யவும். குறிப்பாக நீங்கள் சாப்பிடும் உணவு அமிலத்தன்மை நிறைந்தது என்றால் நிச்சயம் நீங்கள் பல் துலக்க வேண்டும். அதே சமயம் இதையே ஒரு பொழுதுபோக்காக மாற்றி கொள்ள வேண்டாம், ஏனெனில் அடிக்கடி பல் துலக்க பல் எனாமல் தேய்ந்து விடும்.

சில உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவும்

yellow teeth

காபி, டீ, ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்கள், திராட்சை சாறு, சோய் மற்றும் தக்காளி சாஸ் இவற்றை தவிர நம் பற்களில் மஞ்சள் கறையை உண்டாக்கும் வேறு சில உணவு பொருட்களும் இருக்கின்றன. இந்த உணவுகளை தவிர்ப்பது தான், அவர்கள் மஞ்சள் கறையை குறைபதற்கு முதல் படி.

பளபளப்பான பற்களைப் பெற விரும்புபவர்கள் தங்கள் தினசரி துலக்குதல் வழக்கத்தில் பற்களை வெண்மையாக்கும் பற்பசையைச் சேர்க்கலாம். பற்களில் எலுமிச்சையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். எலுமிச்சை அமிலமானது, மேலும் இது எனாமல் தேய்மானம் மற்றும் பல் உணர்திறனை ஏற்படுத்தும்.

இதுவும் உதவலாம்:ABC ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் & பக்க விளைவுகள்!!!

ஆயில் புல்லிங் (எண்ணெய் கொப்பளித்தல்)

இது வாயை சுத்தமாக வைத்திருக்க ஒரு ஆயுர்வேத சிகிச்சை ஆகும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து இதை செய்தால், வாயில் உள்ள பிளேக் மற்றும் பாக்டீரியா கிருமிகள் அழியும், பற்கள் சுத்தமாகவும், வெண்மையாகவும் இருக்கும். எனவே நல்ல தரமான எண்ணெய் வாங்கி இதை செய்யலாம்

ஒரு தேக்கரண்டி எண்ணெய் எடுத்து வாயில் ஊற்றி குறைந்த பட்சம் 10 நிமிடம் அதிக பட்சம் 30 நிமிடம் கொப்பளிக்கவும். விழுங்கி விட கூடாது. பிறகு தண்ணீர் கொண்டு வாயை கழுவி, கடைசியாக பற்களை துலக்க வேண்டும். பல் சுகாதாரம் நமது வாழ்க்கை முறையில் முக்கியம் ஆனது.

பல் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது அவசியம். அல்ட்ரா சோனிக் ஸ்கேலிங் எனப்படும் முறையினால் மருத்துவர் உங்கள் பற்களில் உள்ள பிளேக் மற்றும் அத்துடன் சேர்த்து கறை படிவத்தை எடுத்து விடுவார். எனவே நீங்கள் பற்களை ஜொலிக்க வைக்க விரும்பினால், ஒரு பல் மருத்துவரை அணுகலாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP