ஏன் விக்கல் வருகிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?

தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கவில்லையா? அடிக்கடி விக்கல் ஏன் வருகிறது? இதற்கான சுவாரஸ்யமான காரணங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

reasons for hiccup

நம்மைப் பற்றி யாரேனும் யோசித்தால் நமக்கு விக்கல் வரும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஒரு சிலர் விக்கலை நிறுத்துவதற்காகத் தண்ணீர் குடிப்பார்கள். விக்கலை நிறுத்துவதற்கு பலவிதமான யுத்திகளை யோசித்து முயற்சி செய்தும் பார்த்திருப்போம். ஆனால் என்றாவது ஒருநாள் விக்கல் ஏன் வருகிறது என்று யோசித்து இருக்கிறீர்களா?

சில சமயம் விக்கல் தானாகவே நின்று விடும். சில சமயங்களில் இவை தொடர்வதும் உண்டு. தொண்டையில் உணவு சிக்கினால் விக்கல் வரும். சில சமயங்களில் காரமான மிளகாய் சாப்பிட்டாலும் விக்கல் வரும். விக்கல் வருவதற்கான உண்மையான காரணங்கள்பற்றி உங்களுக்குத் தெரியுமா?

விக்கல் வருவதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளன. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருந்தால் இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். விக்கல் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதை நிறுத்துவதற்கான வழிகளைப் படித்தறிந்து பயன்பெறுங்கள்.

விக்கல் ஏன் வருகிறது?

hiccups

காற்றை சுவாசிக்கும்போது ஏற்படும் தசைப்பிடிப்பு விளைவினால் விக்கல் வருகிறது. பொதுவாக நாம் சுவாசிக்கும்போது விலா எலும்புக்கு இடையே உள்ள தசைகளையும், நுரையீரல் கீழுள்ள திரைத்தசைகளையும்(diaphragm) பயன்படுத்துகிறோம்.

ஒருவர் சுவாசிக்கும்போது, நுரையீரலுக்குள் காற்றை உள் இழுக்க திரைத்தசை கீழே நகர்கிறது. அதே சமயம் மூச்சை வெளியேற்றும்போது, திரைத்தசை காற்றை வெளியேற்ற மேலே நகர்கிறது.

விக்கல் ஏற்படும்போது திரைத்தசை சுருங்கி, சுவாசிப்பதற்கு இடையே காற்றை இழுக்கிறது. உடனடியாக மூச்சுக்குழல் மூடி நுரையீரலுக்குள் அதிக காற்று நுழைவதைத் தடுக்கிறது. மூளையிலிருந்து திரைத்தசைக்கு செல்லும் நரம்புப் பாதைகளில் இடையூறு ஏற்படும்போது விக்கல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

விக்கல் வருவதற்கான காரணங்கள்

விக்கல் வருவது இயல்பானது தான். ஆனால் சில சமயங்களில் இவை நீண்ட நேரத்திற்கு நீடிக்கின்றன. 48 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் விக்கலுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

நரம்பு சேதம் அல்லது எரிச்சல்

திரைத்தசைகளுக்கு பணியாற்றும் சஞ்சாரி மற்றும் விதான நரம்புகளில் சேதம் அல்லது எரிச்சல் ஏற்படுவதும், நீண்ட கால விக்கல்களுக்கு ஒரு காரணம். இந்த நரம்புகளைச் சேதப்படுத்தும் அல்லது எரிச்சலூட்டும் காரணிகள் பின்வருமாறு

  • காதில் உள்ள முடி அல்லது வேறு ஏதாவது உங்கள் செவிச்சவ்வை தொடுவது
  • கழுத்தில் உள்ள கட்டி, நீர்க்கட்டி அல்லது கழுத்துக்கழலை
  • இரைப்பை அமில எதுக்களிப்பு
  • தொண்டை எரிச்சல்

hiccups

மைய நரம்பு மண்டல சீர்குலைவு

உங்கள் மைய நரம்பு மண்டலத்தில் கட்டி, தொற்று அல்லது அதிர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது விக்கல் வருகிறது. இதற்கான காரணங்கள் பின்வருமாறு.

  • மூளை அழற்சி நோய்
  • மூளைச்சவ்வு அழற்சி
  • தண்டுவட மரப்பு நோய்
  • பக்கவாதம்
  • மூளைக் காயம்
  • கட்டி

வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் மருந்துகள்

நீடித்த விக்கல் தொடங்குவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

  • மது
  • மயக்க மருந்து
  • சர்க்கரை வியாதி
  • எலக்ட்ரோலைட் சமநிலையின்மை
  • சிறுநீரக நோய்
  • ஸ்டெராய்டுகள்
  • அமைதிப்படுத்தும் மருந்து

இந்த பதிவும் உதவலாம்: நாம் தூங்கும் நிலை குறித்து அறிய வேண்டியவை!!!



விக்கல் ஏற்பட்டால் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

உங்களுக்கு விக்கல் வரும்போது நீங்கள் வழக்கமாகப் பல வைத்தியங்களை பின்பற்றி இருப்பீர்கள். எனினும் விக்கல் நிற்கவில்லை என்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

hiccups

என்ன செய்யலாம்?

  • ஒரு காகித பையினுள் ஊதவும்
  • உங்கள் முழங்கால்களை மார்புடன் சேர்த்து அணைத்தப்படி முன்னோக்கி சாய்க்கவும்
  • குளிர்ந்த நீர் குடிக்கவும்
  • சிறிது சர்க்கரையை வாயில் போட்டுச் சப்பி சாப்பிடவும்
  • சில நொடிகள் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ளவும்

என்ன செய்யக் கூடாது?

  • மது, குளிர் பானங்கள் மற்றும் சூடான பானங்களைக் குடிக்க கூடாது
  • சூயிங் கம் சாப்பிட கூடாது
  • புகைபிடிக்கக் கூடாது
  • காரமான உணவு சாப்பிட கூடாது
  • அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்
  • சூடாக ஏதாவது சாப்பிட்ட உடனேயே மிகவும் குளிர்ந்த பானமோ அல்லது உணவோ உட்கொள்ள கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி பசி எடுக்கிறதா? எனில் இவை தான் காரணமாக இருக்கும்!!!

அடுத்த முறை உங்களுக்கு விக்கல் வரும்போது, இந்த விஷயங்களை எல்லாம் மனதில் கொள்ளுங்கள். விக்கலை அதிகரிக்கக்கூடிய உணவுகளைத் தவிரத்திடுங்கள். உங்களுடைய தீவிரமான விக்கல் பிரச்சனை இருந்தால் மருத்துவரைத் தொடர்பு கொள்ள மறக்காதீர்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP