வாழ்க்கை முறை, உணவு முறைபோல தூக்கவதற்கும் சரியான முறை உள்ளது. தூங்கும்போது ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், முதுகுவலி போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கலாம்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பதிவில் டாக்டர் ரேச்சல் சலாஸ் அவர்கள் தூங்கும் முறைபற்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். ”இளம் தலைமுறையினர் மற்றும் ஆரோக்கியமான நபர்கள் எந்த முறையில் தூங்குகிறார்கள் என்பது அவ்வளவு முக்கியம் இல்லை.ஆனால் வயதாகும்போது ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படுகிறது, இந்த நேரத்தில் தூங்கும் முறை மிகவும் முக்கியமானது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் தூங்கும் முறைபற்றி என்னென்ன விஷயங்கள் இடம் பெற்றிருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
பல சமயங்களில் நாம் தூங்கி எழும்போது முதுகு வலி அல்லது கழுத்து வலி ஏற்படும். இது குறித்து டாக்டர் ரேச்சல் சலாஸ் அவர்கள் கூறுகையில், ”கழுத்து வலி உள்ளவர்கள் முதுகு தரையில் படும்படி நேராகப் படுத்துத் தூங்குவது வலியை இன்னும் அதிகப்படுத்தும்” என்கிறார்.
மறுபுறம் கீழ் முதுகில் வலி உள்ளவர்களுக்கு, முதுகு தரையில் படும்படி நேராகத் படுத்துத் தூங்குவது அவர்களுக்கு நன்மை தரும். இது தவிர, முதுகுத்தண்டில் வலி இருந்தால், தலையணையை வைத்து ஆதரித்து ஓய்வெடுக்கலாம்.
தூங்கும் போது தோரணை மிகவும் முக்கியமானது. பலரும் முகம் மற்றும் முழங்காலை இணைத்தப்படி சுருண்டு படுத்து தூங்குவார்கள். (கருவில் இருக்கும் குழந்தை போல்) இதனால் கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. இந்த தோரணையில் தூங்கும்போது கை உடலின் கீழ் அழுதப்படுவதாலும், கால் வளைந்து இருப்பதாலும் உடலின் பல பகுதிகளில் வலி ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: நாள் முழுவதும் தூக்க கலக்கமாகவே இருக்கிறதா? என்ன செய்யலாம்?
குறட்டை பிரச்சனையால் பலரும் சிரமப்படுகின்றனர். இதைத் தவிர்க்க, குப்பறப்படுத்து தூங்கினால் குறட்டை விடும் பழக்கத்தைக் குறைக்கலாம் என்கிறார் டாக்டர் ரேச்சல் சலாஸ் அவர்கள். அதே சமயம் தொடர்ந்து அதிக நேரம் குப்புறப்படுத்து தூங்கும் போது முகம் பாதிக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் நீங்கள் எங்குப் படுத்துத் தூங்கினாலும், தூய்மை, வசதியான மெத்தை மற்றும் சுத்தமான தலையணை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
இனி நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு, இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]