இயற்கையான முறையில் உடலை சுத்தம் செய்யும் செயல்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. எடை குறைப்பில் ஆரம்பித்து, முகப் பொலிவு, இதய நோய், புற்றுநோய் எனப் பலவற்றுக்கும் மிகச் சிறந்த பலனை அளிக்கக்கூடியது இது. ஜூஸ் வகைகளில் ABC ஜூஸ் தான் சிறந்த சாய்ஸ்.
ABC ஜூஸ் என்று கூறப்படும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றும் கலந்த ஜூஸ் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது. ஆனால் இந்த ஜூஸை எவ்வாறு செய்வது? வெறும் வயற்றில் ABC ஜூஸ் குடிக்கலாமா? யாரெல்லாம் குடிக்கக் கூடாது? மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
ABC ஜூஸ் செய்வது எப்படி?
- தேவையான பொருட்கள்
- ஆப்பிள் - 1 பெரியது
- கேரட் - 1 சிறியது
- பீட்ரூட் - 1 மிக சிறியது அல்லது பாதி
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் (தேவைபட்டால் மட்டும்)
செய்முறை
- முதலில் ஆப்பிள், பீட்ரூட், கேரட்டை சுத்தமான நீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
- பின்பு அவற்றின் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அடுத்ததாக ஜூஸர் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இறுதியில் வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சர்க்கரை எதுவும் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
வெறும் வயற்றில் ABC ஜூஸ் குடிக்கலாமா ?
ABC ஜூஸ் வெறும் வயிற்றில் சிறப்பாக செயல்படும் ஆரோக்கியமான பானமாகும். எனவே காலை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குடிக்கலாம் என்று மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். சிலருக்கு வெறும் வயற்றில் உட்கொள்வது ஒத்து கொள்ளாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. அவர்கள், காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் அதாவது காலை உணவு முடித்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்தும் எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் விரும்பினால், மாலை நேரத்திலும் குடிக்கலாம்.
ABC ஜூஸில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், அதை அதிகமாக உட்கொள்வது சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் சிவப்பு நிறத்தில் வருவது போன்ற உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
சிறுநீரக நோயாளிகள் ,இரத்த அழுத்தம் மிகுதியானவர்கள் மற்றும் நீரிழவு நோயாளிகள், குடல் எரிச்சல் நோய்க்குறி(Irritable Bowel syndrome) உள்ளவர்கள் போன்ற பொட்டாசியம் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் ABC ஜூஸைத் தவிர்க்க வேண்டும்.
இதுவும் உதவலாம்:காலை உணவைத் தவிர்ப்பதால் உண்டாகும் ஆபத்துகள்!!!
ABC ஜூஸ் நன்மைகள்
- உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளான A, B1, B2, B3, B6, B9 C , E, K , இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் செலினியம் என பல சத்துக்களை அளிக்கிறது.
- இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன.
- சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து குடித்து வர உங்கள் முகம் மற்றும் சரும பளபளப்பை நீங்களே கண்கூட காண முடியும்.
- ABC ஜூஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை நிறைவாகக் கொண்டுள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து பண்புகளால் எடை குறைப்புக்கு உதுவுகிறது.
- பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்கிறது, இது மலச்சிக்கலைப் போக்கவும், செரிமான செயல்முறையை விரைவுபடுத்தவும் உதவுகிறது.
- ABC ஜூஸ் உங்கள் கண் தசைகளை பலப்படுத்துகிறது.
- புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.
- அடிக்கடி உட்கொண்டு வந்தால் மாதவிடாய்காலத்தில் வலியை எளிதாக்குகிறது.
- இரத்தசோகை பிரச்சினைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.

சில கூடுதல் குறிப்புகள்
- ABC ஜூஸில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சிலருக்கு வாய்வு ஏற்படலாம். எனவே வாயுத்தொல்லை இருந்தால் சாறு தயாரிக்கும் போது சிறிது இஞ்சி சேர்க்கவும்.
- மாதக் கணக்கில் தினசரி ABC ஜூஸ் உட்கொள்வதை தவிர்த்து முதல் 3-4 வாரங்கள் தினசரி தவறாமல் எடுத்துகொள்ளுங்கள், அதன் பின்பு வாரம் 2-3 முறை போதுமானது.
- கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது, கர்ப்பிணிகள் வெறும் வயற்றில் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும், கர்ப்ப கால சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்,சிறுநீரக பிரச்சினை இருந்தால் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தினசரி ABC ஜூஸ் குடிப்பதை தவிர்த்து வாரம் 2முறை எடுத்துக்கொள்வதே கர்ப்பிணிகளுக்கு போதுமானது.
குறிப்பு: உங்களுக்கு உடலில் வேறு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உங்கள் மருத்தவரிடம் ஆலோசித்து பின்பு எடுத்துகொள்ளுங்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation