கொய்யாப்பழம் மிகவும் சத்து நிறைந்தது. குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் இந்த பழத்தைப் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுடன் வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு நன்மை பயக்கிறது. உடல் எடையைக் குறைக்கவும் கொய்யாப்பழம் சிறந்த தேர்வாகும்.
இப்படி கொய்யாப்பழத்தில் பல நன்மைகள் கொட்டிக்கிடந்தாலும், ஒரு சிலர் மட்டும் கொய்யாப்பழத்தை சாப்பிட கூடாது. அது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே இந்த பதிவில் ESIC மருத்துவமனையின் மருத்துவரும், பிரபல உணவியல் நிபுணருமான ரிது பூரி அவர்கள், யாரெல்லாம் கொய்யாப்பழம் சாப்பிடக் கூடாது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
வயிறு உப்புசம் பிரச்சனை உள்ளவர்கள்
அடிக்கடி வயிறு உப்புசம் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடக் கூடாது. ஒருவேளை சாப்பிட்டாலும் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் C மற்றும் பிரக்டோஸ் நிறைந்துள்ளது. இதனால் எளிதில் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வயிறு உப்புசம் பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் ரிது பூரி அவர்கள்.
இரத்த சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள்
இரத்த சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடக் கூடாது. இரத்தச் சர்க்கரை குறைவு என்பது ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவு இயல்பைவிட மிகக் குறைவாக இருப்பது ஆகும். கொய்யாப்பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை உயர்த்தல் குறியீடு மிககுறைவாக இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ஆனால் இரத்தச் சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் கொய்யாபழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம் ஒரு சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் இரத்த சர்க்கரை அளவு இயற்கையாகவே குறையும். எனேவே ஏதுனும் பிரச்சனைக்காகத் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் மருத்துவரை ஆலோசித்தபின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் பாலக் பன்னீரை சாப்பிடலாமா? கூடாதா?
வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள்
வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், குறிப்பாக அடிக்கடி வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும். ஏனெனில், கொய்யாப்பழத்தில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலத்தில் அதிகளவு சேர்ந்து விடுகிறது. அதனால் கொய்யாப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை இன்னும் மோசமாகும். அதே சமயம் அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு, கொய்யாபழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்கிறார் ரிது பூரி அவர்கள்.
அறுவை சிகிச்சை செய்துக்கொள்பவர்கள்
அறுவை சிகிக்கை செய்துக்கொள்ள இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அறுவை சிகிச்சைக்குக் குறைந்தது 8 முதல் 10 நாட்களுக்கு முன்பே கொய்யாப்பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். கொய்யாப்பழம் இரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும். இதன் காரணமாக, இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒருவேளை அறுவை சிகிக்கை செய்துக்கொள்ள இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு சாப்பிடுவது நல்லது.
பல் வலி உள்ளவர்கள்
பல் வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சில நாட்களுக்குக் கொய்யாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கொய்யப்பழம் கடித்து சாப்பிடுவதற்கு சற்று கடினமாக இருக்கும். பல் வலி இருக்கும் நேரத்தில் அதை சாப்பிட்டால் வலி இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: நிபுணர் கருத்து: இவற்றை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்க வேண்டாம்!
எனவே நீங்களும் இதுப் போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால் முடிந்தவரை கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation