சாதம் வடிக்கவோ, உருளைக்கிழங்கு, முட்டை வேகவைக்கவோ, பருப்பு சமைக்கவோ, அல்லது உடனடியாக எது செய்வதாக இருந்தாலும் நம் மனதில் முதலில் வருவது பிரஷர் குக்கர் தான். காரணம் பிரஷர் குக்கரில் உணவு விரைவாக சமைக்கப்படுவது தான். உடனடியாக சமைக்க இதை விட சிறந்த சமையலறை சாதனம் இருக்க முடியாது. ஆனால் சில பொருட்களை குக்கரில் சமைக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
குக்கரில் சீக்கிரம் சமைத்துவிடலாம் என்று நாம் நினைக்கும் பொருட்கள் உண்மையில் நமக்கு தீங்கி விளைவிக்கும். பிரஷர் குக்கரில் சமைக்கும் போது இந்த பொருட்கள் அவற்றின் அசல் சுவையை இழக்கின்றன, எனவே அவற்றை பிரஷர் குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். குக்கரில் அரிசி சமைக்கக் கூடாது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஏனென்றால், அரிசியில் இருந்து வெளியாகும் ஸ்டார்ச் ஒரு ரசாயனத்தை உருவாக்குகிறது, இது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த பதிவில், பிரஷர் குக்கரில் சமைப்பதற்கு முன் 10 முறை யோசிக்க வேண்டிய பொருட்கள் மற்றும் குக்கரில் சமைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
குக்கரின் அடிப்பகுதி தடிமனாகவும், மிகவும் ஆழமாகவும் இருக்கும். சிலர் அதில் சிக்கனை வறுக்கிறார்கள். நீங்களும் அவ்வாறு செய்தால், கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
குக்கரை ஒருபோதும் பொரிப்பதற்கு பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், குக்கர் அதிக வெப்பநிலையில் எண்ணெயை சூடாக்குவதற்காக உருவாக்கப்படவில்லை, எனவே இது சிக்கனை பொரிப்பதற்கு நல்லதல்ல, மேலும் உங்கள் குக்கரையும் பாதிக்கும். சிக்கனை பொரிப்பதற்கு நல்ல வாணலியை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
இந்தத் தகவல் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்ய மறக்காதீர்கள். இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து படிக்க ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]