மல்பெரியில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் சுவை திராட்சை சுவையை போல் இருக்கும். மல்பெரி சாப்பிடுவதால், இரும்பு சத்து குறைபாடு நீங்கும் மற்றும் உடல் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். இதில் ரைபோ ஃபிளேவின் உள்ளது. அவை நம் திசுக்களை ஃப்ரீ ரேடிக்கல்ஸிடமிருந்து காத்து நம் உடல் முழுவதும் ஆக்சிஜன் நகர துணை புரிகிறது. மல்பெரியில் 88% தண்ணீர் தான் இருக்கிறது. 1 கப் மல்பெரியில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளன.
வாழ்க்கை முறை பயிற்சியாளர் டாக்டர். ஸ்நேஹா அல்சூல் ஆரோக்கியம் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட தகவல்களை அடிக்கடி தனது சமூக வளைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அவர் ஒரு பதிவில் இந்த பழத்தின் நன்மைகளை பற்றி விளக்கியுள்ளார். இந்த பழம் நம்முடைய 1 பிரச்சனையை மட்டும் அல்ல, 5 பிரச்சனைகளை தீர்க்கிறது. இந்த கட்டுரையில் இந்த பழம் எப்படிப்பட்ட 5 பலன்களை தருகிறது என்று பார்க்கலாம்.
இதுவும் உதவலாம்:குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்
நீரழிவு நோயில் மாதிரி 2 உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு சடாரென ஏறும், எனவே அவர்கள் கார்போஹைட்ரேட்டு உணவுகளை உட்கொள்ளும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மல்பெரி பழத்தில் compound 1-deoxynojirimycin (DNJ) எனும் வேதி பொருள் இருக்கிறது. இது நம் குடலில் மாற்றத்தை ஏற்படுத்தி, கார்போஹைட்ரேட்டுகளை முறித்து விடுகிறது. எனவே உணவு சாப்பிட்ட உடனே ஏற்படும் சர்க்கரை அளவின் ஏற்றத்தை மெதுவாக்கி, மல்பெரி நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. மல்பெரி வயிற்றில் சர்க்கரை முறிவை மெதுவாக்குகிறது அதனால் இரத்தத்திலும் அது மெதுவாக உறிஞ்சப்படுகிறது. எனவே இது உடலில் உள்ள சர்க்கரை அளவை மிக ஆரோக்கியமாக வைக்கிறது.
கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் ஒவ்வொரு செல்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான கொழுப்பு மூலக்கூறு. எனவே இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் இதய நோய்கள் தாக்கும் வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது. மல்பெரி பழம் மற்றும் அதிலிருந்து எடுக்கப்படும் சாறும் நம் உடலில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது. கூடுதலாக, கல்லீரலில் கொழுப்பு தேங்குவதை தடுக்கிறது, அதனால் கொழுப்பு நிறைந்த கல்லீரல் உண்டாகாமல் தடுக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
மல்பெரி பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ஜீரணத்தை எளிமையாக்குகிறது. நார்ச்சத்து கொண்ட மல்பெரி பழத்தை ஒரு முறை சாப்பிட ஒரு நாளுக்கு உண்டான 10% தேவைகளை பூர்த்தி செய்கிறது. இது வயிற்றில் மலத்தை மேலே தள்ளி விட்டு, உணவு குழாய் வழியாக உணவு செல்லும் பாதையை எளிமையாக்குகிறது. மல்பெரி சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
ஆய்வுகளை பொறுத்தவரை நம் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகரித்து நம்மை பாதுகாப்பாக வைக்கிறது. இவற்றை எல்லாம் தாண்டி, மல்பெரி வைட்டமின் C சத்துகளை நமக்கு தருகிறது. எனவே இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியின் மூலப் பொருளாக இருக்கிறது.
இதுவும் உதவலாம்:குளிர் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு 1 பல் பூண்டு போதும்!!
வெள்ளை மல்பெரியில் ஃபிளேவனாயிட்ஸ், ஆல்கலாயிட்ஸ் மற்றும் ஃபீனாலிக் ஆசிட்ஸ் போன்ற கேன்சரை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அதிகப்படியான மன உளைச்சல் உங்கள் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை பாழாக்குகிறது. இதனால் கேன்சர் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. நூறு ஆண்டுகளாக, கேன்சரை எதிர்க்கும் சீனாவின் பாரம்பரிய மருத்துவ தீர்வு மல்பெரியில் தான் இருக்கிறது.
இவற்றை தவிர, மல்பெரி பழம் மேலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. உங்கள் உணவில் இந்த பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். தினமும் இதை உட்கொள்வதால் ஏற்படும் நன்மையை கவனியுங்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]