குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக மாற வேண்டுமா? உணவுகளில் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!

 மஞ்சளை உங்களது உணவு முறையில் பயன்படுத்தினால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

turmeric helps for weight loss

இன்றைய ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரிடத்திலும் உணவுப் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. கடைகளில் விற்கக்கூடிய பெயர் தெரியாத பொருள்களைக் கூட வாங்கி சாப்பிடும் பழக்கத்தால் உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல உடல் நலப் பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். இதனால் இன்றைக்குப் பலர் அதிகரித்த எடையைக் குறைப்பதற்காக ஜிம்மிற்குச் செல்வது, உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற பல்வேறு செயல்களைப் பின்பற்றி வருகின்றனர். உடல் எடையைக் குறைக்கிறதோ? இல்லையோ? மக்களை அசதியாக்குகிறது.

இந்த நேரத்தில் வீட்டிலேயே எளிமையான முறையில் அதிகரித்த எடையை எப்படிக் குறைப்பது? என்ற தேடலில் இறங்குகின்றனர். என்ன தேடினாலும் கிடைக்கக்கூடிய முடிவு என்னவோ? நம்முடைய மூதாதையர்கள் கடைப்பிடித்து வந்த உணவு முறையும், அவர்கள் உபயோகித்த சமையல் பொருள்கள் தான்.ஆம் நம்முடைய இந்தியர்களின் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு மசாலா பொருள்களிலும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள் எனப் பலவற்றிற்குத் தீர்வு காண்பதற்காகப் பல உணவுப் பொருள்கள் ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் ஏராளமாக உள்ளது. இதோ இன்றைக்கு உடல் எடையைக் குறைப்பதற்கு மஞ்சள் எப்படி உதவுகிறது? எப்படியெல்லாம் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

turmric help reduce weight

உடல் எடையைக் குறைப்பிற்கு உதவும் மஞ்சள்:

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், குர்குமின் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, மக்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. குறிப்பாக இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்கு உடல் பருமனைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் மஞ்சளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. இதனால் வயிறு, தொடையில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் தோற்றத்தைப் பெற முடியும். இதோடு மஞ்சளை உணவு முறையில் தினமும் சேர்த்துக் கொள்ளும் போது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இன்சுலின் எதிர்ப்பைத் தடுப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

மஞ்சளை எப்படிப் பயன்படுத்துவது?

நாம் சமைக்கக்கூடிய சாம்பார், ரசம், குழம்பு வகைகள் அனைத்திலும் மஞ்சளைச் சேர்க்கலாம். கடைகளில் விற்கப்படும் பாக்கெட்டுகளை வாங்கி சமைப்பதை விட, மஞ்சள் கிழங்காக வாங்கி அரைத்துச் சாப்பிடும் போது, உடலுக்கு ஆற்றலோடு எடையைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது. உணவு முறைகளில் சேர்ப்பது ஒரு புறம் இருந்தால் மஞ்சள் டீயும் குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அல்லது இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து அதனுள் சிறிதளவு மஞ்சள் சேர்க்கவும். சுவைக்கான புதினா அல்லது இலவங்கப் பட்டை சேர்த்து தினமும் குடித்து வரவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.

turmeric water

மேலும் படிக்க:ஒல்லியான தோற்றத்தைப் பெற வேண்டுமா? கொஞ்சம் புதினா தண்ணீர் குடிச்சுப் பாருங்க!

இவ்வாறு மஞ்சளை உங்களது உணவு முறையில் பயன்படுத்தினால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே சமயம் எடைக் குறைப்பிற்குச் செய்யக்கூடிய சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது நல்லது.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP