herzindagi
headache  card

Headache Relief Tea: தலைவலியில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற சூப்பரான டீ!

தலைவலி பிரச்சனையை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து டீ ஒன்றை விரைவாக தயாரிக்கலாம். 
Editorial
Updated:- 2023-08-06, 17:58 IST

தலைவலி பிரச்சனை பெரும்பாலும் அனைவரையும் தொந்தரவு செய்கிறது. குறிப்பாக நாள் முழுவதும் சோர்வு, மன அழுத்தம் அல்லது வேறு பல காரணங்களால் தலைவலி ஏற்படகிறது. முறையற்ற உணவு மற்றும் வயிற்றில் வாயு இருப்பதாலும் தலைவலி பிரச்சனை ஏற்படும். தலைவலியிலிருந்து விடுபட மக்கள் பெரும்பாலும் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இதற்காக ஒவ்வொரு முறையும் பெயின் கில்லர் சாப்பிடுவது சரியல்ல.  தலைவலியிலிருந்து விடுபட இந்த டீயை வீட்டிலேயே உடனடியாக தயாரிக்கலாம். உணவியல் நிபுணர் மன்பிரீத்தும் இதை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்.

 

இந்த பதிவும் உதவலாம்: செரிமானம் முதல் தூக்கம் வரை நன்மை பயக்கும் வாழைப்பழ தேநீர்!!

தேவையான பொருட்கள் 

headache relif tea

  • கருப்பு மிளகு - 5
  • புதிய மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி - 1/2 அங்குலம்
  • ஆளி விதைகள் - 1 தேக்கரண்டி
  • வேம்பு - 2-3 இலைகள்

செய்முறை

  • எல்லாவற்றையும் தண்ணீரில் கலக்கவும்.

 

  • தண்ணீர் பாதி குறையும் வரை கொதிக்க வைக்கவும்.

 

  • அதை வடிக்கட்டி சூடாக குடிக்கவும்.

டீக்கு பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்

headach reliving tea

  • தலைவலிக்கு ஆரோக்கியமான தேநீரில் பயன்படுத்தப்படும் நன்மைகள்

 

  • இந்த தேநீரில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

  • இஞ்சி உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை பராமரிக்க உதவுகிறது.

 

  • இந்த டீ வீக்கத்தைக் குறைத்து செரோடோனின் என்ற மகிழ்ச்சியான ஹார்மோனை அதிகரிக்கிறது.

 

  • இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

 

  • மஞ்சளில் தலைவலி அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

 

  • மிளகிள் பைபரின் உள்ளதால் வலி நிவாரணியாக செயல்படுகிறது.

 

  • கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

 

  • வேம்பு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் ஹார்மோன்களை சமன் செய்து தலைவலியை குறைக்கிறது.

 

  • ஆளி விதை ஈஸ்ட்ரோஜன் அளவை சமநிலைப்படுத்தி ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது.

 

  • தலைவலியை போக்கும் தேநீர் குடிக்க தயார்

 

குறிப்பு- இந்த டீயில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கையானவை என்றாலும், சரியான அளவில் எடுத்துக் கொண்டால் எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆனால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறவும்.

 

இந்த பதிவும் உதவலாம்: இது தெரிஞ்சா இனி விட மாட்டிங்க..!! கறிவேப்பிலை தேநீரில் இருக்கும் 6 நன்மைகள்

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]