
இன்றைக்கு அனைவரது வீடுகளிலும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக உள்ளது அயர்ன் பாக்ஸ். துணிகளை துவைத்து அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக கொஞ்சம் தேய்த்து உபயோகிக்கும் போது கொஞ்சம் மிடுக்குடன் அழகாகத் தெரிவோம். நம்மை அழகாக்கும் அயர்ன் பாக்ஸை நீண்ட நாட்கள் உபயோகிக்கும் போது அதன் அடிப்பகுதி கருமையாகி விடும். இதை அப்படியே விட்டு விடும் போது ஆடைகளில் அழுக்குகள் அப்படியே தெரியவரும். அயர்ன் பாக்ஸில் உள்ள இரும்பின் சோப்லேட் தேய்ந்து அல்லது கருகிவிட்டதாகத் தோன்றினால், உங்கள் விரல்களில் தீக்காயங்கள் ஏற்படக்கூடும். இதுப்போன்ற பாதிப்புகள் ஏற்படுதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த கட்டுரையின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: குறைந்த பட்ஜெட்டில் வீட்டை அலங்கரிப்பதற்கான சில யோசனைகள்!
நகங்களில் இருக்கும் நெயில் பாலிஷை அளிப்பதற்கு நெயில் ரிமூவர் பயன்படுத்துவோம். அதுபோல அயன் பாக்ஸில் ஒட்டியிருக்கும் கறையை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதோடு அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியில் உள்ள கறைகளை அகற்றுவதற்கு எண்ணெய்யைப் பயன்படுத்தவும். அயர்ன் பாக்ஸை ஆன் செய்து விட்டு அதன் மீது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும். சூடு கொஞ்சம் ஆறியவுடன் ஈரத்துணியால் துடைத்தால் போதும் கறைகள் மறையக்கூடும்.
மேலும் படிக்க: சிறிய வீட்டையும் அழகாக மாற்றுவதற்கான டிப்ஸ்கள்!
உங்களது வாழ்க்கையில் அன்றாடம் தேவைப்படககூடிய உடல் நலம் சார்ந்த தகவல்கள், அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்புகள், பெண்கள் சந்திக்கும் போன்ற பிரச்சனைகள் குறித்த கட்டுரைகளை அறிந்துக்கொள்ள Herzindagi வுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]