home decor design

சிறிய வீட்டையும் அழகாக மாற்றுவதற்கான டிப்ஸ்கள்!

<span style="text-align: justify;">சிறிய வீடுகளில் பர்னிச்சர் பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தால் முதலில் அறைக்கு ஏற்றார் போல் அதை வடிவமைக்க வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-06-28, 13:48 IST

நாம் வசிக்கும் வீடுகளை அழகாக வைத்திருப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம். இருந்தப்போதும் சில நேரங்களில் பெரிய வீடுகளில் நாம் வசிக்க முடியவில்லையே? என்ற ஏக்கம் நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். இதோ இன்றைக்கு நீங்கள் வசிக்கும் சிறிய வீடுகளைக் கூட எப்படி பிரம்மாண்டமாகவும், அழகாகவும் காட்டுவது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

interesting tips

சிறிய வீடுகளையும் அழகாக்கும் டிப்ஸ்கள்:

பொருட்களை அடுக்கி வைத்தல்:

சின்ன வீடாக உள்ளது அதனால் தான் அனைத்துப் பொருட்களும் கீழே இருக்கிறது என்ற வார்த்தையை இனி நீங்கள் பயன்படுத்த தேவையில்லை. சிறிய வீடாக இருந்தாலும் நீங்கள் எந்த பொருட்களை எங்கு எடுக்கிறீர்களோ? அதே இடத்தில் அதை வைத்து விட வேண்டும். அலமாரிகள் இருந்தால் அதில் அடுக்கி வைக்கவும். எதையும் பரப்பிப் போடாதீர்கள். இப்படி செய்தாலே சிறிய அறையாக இருந்தாலும் உங்களுக்கு விசாலாகமாக காட்டும்.

பர்னிச்சர் பொருட்கள்:

வீடுகளில் டைனிங் டேபிள், நாற்காலி போன்ற வீடுகளை அலங்கரிக்கும் பர்னிச்சர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் சிறிய வீடாக இருப்பதால் இதையெல்லாம் வைப்பதற்கு நிச்சயம் இடம் இருக்காது. எனவே இன்றைக்கு பல வீடுகளில் பயன்படுத்தப்படும் மடக்கு பர்னிச்சர் பொருட்களைப் பயன்படுத்துங்கள். தேவைப்படும் போது உபயோகித்துவிட்டு பின்னர் மடக்கி வைத்துவிடுங்கள். இது இடத்தையும் அடைக்காது. உங்களுக்கும் விரும்பிய பொருட்களைப் பயன்படுத்தியது போன்ற எண்ணம் ஏற்படும்.

தரை விரிப்பு:

உங்களது வீடுகளில் தரை விரிப்பை அறையின் அளவுக்கு ஏற்றார் போல் தேர்ந்தெடுக்கவும். சிறிய அறையாக இருந்தாலும் சரியான அளவில் நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் போது அழகாக காட்டுவதோடு அறைகளையும் விசாலமாக காட்டும்.

வண்ணம் தீட்டுதல்:

சிறிய அறைகள் தானே உள்ளது என்று வெள்ளை நிறம் கொண்ட சுண்ணாம்புகளை மட்டும் அடிக்கக்கூடாது. அறைகளை விசாலமாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அடர்நிறங்களைக் கொண்ட வண்ணங்களை நீங்கள் அடிக்கலாம். ஒவ்வொரு அறைக்கு ஒவ்வொரு கலர்கள் அடிக்கலாம். இல்லை ஒரு அறையில் இரு பக்கங்களும் வேறு வேறு வண்ணங்கள் தீட்டவும்.

அளவில் கவனமாக இருத்தல்:

சிறிய வீடுகளில் பர்னிச்சர் பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தால் முதலில் அறைக்கு ஏற்றார் போல் அதை வடிவமைக்க வேண்டும். எந்த பொருட்கள் வாங்கினாலும் அதனுள் வேறு பொருட்களை வைப்பதற்கான சேமிப்பு வசதி இருக்கிறதா? என பார்த்துக் கொள்ளவும். இவை உங்களது வீடுகளில் தேவையில்லாமல் பொருள்கள் சிதறிக் கிடப்பதைத் தவிர்ப்பது உதவும். 

 home decor ideas

இதுபோன்ற பல்வேறு முறைகளைப் பின்பற்றினாலே நிச்சயம் சிறிய வீடாக இருந்தாலும் அழகாகவும், விசாலமாகவும் தெரியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]