herzindagi
badam gel big image

Summer Drinks: கோடையில் ஆரோக்கியமாக இருக்க இந்த குளிர்ச்சி பானத்தை தினமும் குடியுங்கள்

கோடையில் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் பானங்களைக் குடித்து வந்தால் உடல் நீரேற்றமாகவும் மற்றும் வெப்ப அலைக்கு மத்தியில் ஆரோக்கியமாக இருக்க முடியும். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2024-04-12, 16:15 IST

நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருப்பதற்கான சரியான தகவல் இல்லாததால் நம் உடலை கெடுத்துக் கொள்கிறோம். உதாரணமாகக் காலநிலை மற்றும் வயதுக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக் கொள்ளாதது நோய் வருவதற்கு முக்கிய காரணம். குளிர்காலத்தில் குளிர்ச்சியைத் தவிர்க்கவும் உடலை சூடாக வைத்திருக்கும் பொருட்களைச் சாப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் கோடையில் உடலை உள்ளிருந்து குளிர்விக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். இது உடலை குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்துடனும் வைத்திருக்கும். மேலும் வலுவான சூரிய ஒளி மற்றும் அனல் காற்றுக்கு மத்தியில் ஆரோக்கியத்தைத் தக்க வைக்க உதவுகிறது. கோடையில் ஆரோக்கியமாக இருக்க உதவும் அப்படிப்பட்ட ஒரு ஆரோக்கியமான பானத்தைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இது குறித்து உணவு நிபுணர் மன்பிரீத் கூறியுள்ளார், இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

மேலும் படிக்க: செரிமானத்தை பாதிக்காமல் வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் வெள்ளரிக்காய்

பாதாம் பிசின், எலுமிச்சை மற்றும் புதினா இலைகளிலிருந்து ஆரோக்கியமான பானம் தயாரிக்கலாம்

  • புதினா இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் வீக்கத்தைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் உடலை நச்சு நீக்கி, நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
  • எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
  • சியா விதைகளில் உணவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் நீங்கி வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.
  • பாதாம் பிசின் கதிரா வெப்ப பக்கவாதத்திலிருந்து பாதுகாக்கிறது. இது இயற்கையாகவே உடலைக் குளிர்வித்து நச்சுத்தன்மையைப் போக்க உதவுகிறது.
  • பாதாம் பிசின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது மற்றும் செரிமானத்திற்கும் நல்லது.

கோடைக்கால குளிர்ச்சி பானம் தயாரிப்பது எப்படி?

mint inside

தேவையான பொருள்கள்

  • எலுமிச்சை - 1
  • புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
  • சியா விதைகள் - 1 டீஸ்பூன் ஊறவைத்தது
  • பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்தது
  • தண்ணீர் - 1 லிட்டர்

செய்முறை

sabja seed inside

  • 1 கிளாஸ் தண்ணீரில் 3 துண்டுகள் பாதாம் பிசின் சேர்க்கவும்.
  • இப்போது அதை 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அதன்பிறகு பாதாம் பிசின் ஜெல்லை ஒரு கண்ணாடி கிளாஸில் போட்டு நறுக்கிய புதினா இலைகள்,  எலுமிச்சை சாறு மற்றும் சியா விதைகளை சேர்க்கவும்.
  • அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து, சிறிது நேரம் கழித்து எடுக்க வேண்டும் .
  • இதை நாள் முழுவதும் குடிக்கலாம்.

பாதாம் பிசின் நன்மைகள் 

பாதாம் பிசினியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் உடலை உள்ளிருந்து குளிர்விக்கிறது. பாதாம் பிசின் தண்ணீரை போல சுலை, நிறம் மற்றும் மணமற்றது. கோடையில் வெப்ப பக்கவாதம் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் பாதாம் பிசின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை குறைக்கிறது. பாதாம் பிசின் கொண்ட பானங்களை உட்கொள்வது உங்கள் உடலை நீரிழப்பிலிருந்து பாதுகாக்கும்.

மேலும் படிக்க: 2 வாரங்களில் தொப்பை மற்றும் தொடை பகுதி கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க, படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]