herzindagi
cucumber big image

Weight Loss Cucumber: செரிமானத்தை பாதிக்காமல் வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் வெள்ளரிக்காய்

கோடையில் எளிதாக கிடைக்கும் காய்கறிகளில் வெள்ளரிக்காய் ஒன்றாகும். பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது, எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Editorial
Updated:- 2024-04-10, 13:34 IST

கோடையில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும் இவற்றில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன கோடையில் இதை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடைவது மட்டுமின்றி நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும். இதன் சத்துக்கள் பற்றி கூறினால், வைட்டமின் ஏ, கே, சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றாலும், செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் வெள்ளரியை உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். எடையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் வெள்ளரிக்காய் எவ்வாறு உதவுகிறது என்பதைத் பார்க்கலாம்.

மேலும் படிக்க: வயதை மறைத்து என்றும் இளமையாக இருக்க காலையில் செய்யவேண்டிய விஷயங்கள்

கோடை காலத்தில் வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

cucumber inside

கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரியும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால். இதனை உட்கொள்வதால் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு அதிகப்படியான கொழுப்பு மற்றும் கலோரிகள் உட்கொள்வதைத் தவிர்க்கிறது. வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.  உணவு உண்ணும் முன் வெள்ளரிக்காயை உட்கொண்டால் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதால் கொழுப்பை எரிக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவதுடன், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, வாயு, எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றில் உள்ள அஜீரணம் போன்ற பிரச்சனைகளையும் போக்குகிறது.

வெள்ளரியை உணவில் சேர்த்துக்கொள்ளும் முறைகள்: 

cucumber inside

  • வெள்ளரியை சாலட்டாக சாப்பிடலாம்.
  • வெள்ளரி சாறு எடுத்து குடித்து வந்தால் நன்மை பயக்கும்.
  • வெள்ளரியை சாண்ட்விச்சில் சேர்த்தும் சாப்பிடலாம்.
  • வெள்ளரிக்காய் ரைதாவையும் உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க: 2 வாரங்களில் தொப்பை மற்றும் தொடை பகுதி கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!!

உங்களுக்கு சரியான தகவலை வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்

 

Image Credit:Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]