இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா?
மணிக்கணக்கில் புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லையா?
நடு இரவில் முழிப்பு வந்தால் திரும்பவும் தூங்க கடினமாக உள்ளதா?
சரியான தூக்கம் இல்லை என்றால் அன்றைய நாள் முழுவதும் மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கும். இது நிச்சயமாக ஒருவருடைய செயல்திறனையும் பாதிக்கும். இந்தப் பிரச்சனை தீவிரமடைவதற்கு முன் இதற்கான சரியான தீர்வை கண்டறிய வேண்டும். இன்றைய வாழ்க்கை சூழலில் பலரும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஒரு சிலர் தூங்குவதற்காக மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற மாத்திரைகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
தூக்கமின்மையை சரி செய்வதற்கு வீட்டிலேயே இந்த ஸ்பெஷல் டீயை செய்து குடிக்கலாம். இந்த குறிப்புகளை பின்பற்றினால் மிகக் குறைந்த நேரத்தில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த டீ குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இந்த ஸ்பெஷல் மஞ்சள் டீயின் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பை தாண்டி, உடலில் பல அதிசயங்களை செய்யும் வலிமை பயிற்சிகள்!
மஞ்சளில் குணப்படுத்தும் பண்புகள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், நல்ல தூக்கத்தை பெறவும் உதவுகின்றன. இதனுடன் மஞ்சள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இது நல்ல தூக்கத்தை பெற உதவும். ஸ்பெஷல் டீ தயாரிக்கும்பொழுது கட்டாயமாக சீமை சாமந்தி டீயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைத்து, உணர்வுகளை அமைதி படுத்துகின்றன. இதில் உள்ள பண்புகள் நல்ல தூக்கத்தை பெறவும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
இதில் உள்ள மெக்னீசியம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இது பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற அனுமதிக்கிறது.
இது தூக்க சுழற்சியை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது உங்களை நிறைவாக வைத்துக் கொள்ளும். இதன் மூலம் காலையில் அதிக பசியுடன் எழுவதை தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பல நோய்களுக்கு மருந்தாகும் கொய்யா இலைகளை, எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]