herzindagi
constipation problem image

Constipation Problem: வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மலச்சிக்கல் பிரச்சனையா... இதோ சரியான தீர்வு!!

மலச்சிக்கலால் கவலைப்பட வேண்டியிருக்கா.. சில பழங்களை உட்கொள்வதன் மூலம் பலன் பெறலாம். 
Editorial
Updated:- 2023-08-07, 20:03 IST

பழங்கள் உண்பதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி பல வகையான சத்துக்களும் இதில் காணப்படுகின்றன. இதன் காரணமாக அவற்றை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உடல் சிறப்பாக செயல்பட உதவுகிறது. உதாரணமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் சில வகையான பழங்களை உட்கொள்ளலாம்.

மலச்சிக்கல் காரணமாக சில நபர் மலம் கழிப்பதில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் அது மிகவும் வலியை தருகிறது. இந்த சூழ்நிலையில் சில பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நிச்சயமாக அதன் பலனைப் பெறுவீர்கள். எனவே மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் சில பழங்களைப் பற்றி பார்க்கலாம்

 

இந்த பதிவும் உதவலாம்: செரிமான பிரச்சனையா..? வீட்டிலேயே செய்து இந்த மாத்திரையை சாப்பிடுங்கள்!!

ஆப்பிள்

construption apple

ஆப்பிள் பழங்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அதற்கும் ஆப்பிளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் ஆப்பிளில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது குறிப்பாக இதில் பெக்டின் உள்ளது இது மலத்தை மென்மையாக்க உதவுகிறது மேலும் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. 

கிவி

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறவும், குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் விரும்பினால் கிவியை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் கிவியில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இதில் ஆக்டினிடின் என்ற நொதியும் உள்ளதால் புரதங்களை உடைக்க உதவுகிறது. கூடுதலாக இது செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களுக்கு உதவும். இதனால் மலச்சிக்கலுக்கு நிறைய நிவாரணம் பெறுகிறது.

பப்பாளி

papaya for constrption

ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவர் கண்டிப்பாக பப்பாளியை உட்கொள்ள வேண்டும். பப்பாளி பழத்தை குறைந்த அளவில் தொடர்ந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் பெறுவீர்கள். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் சிரமப்படுகிறீர்கள் என்றால் ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். இந்த வகை பழங்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி மிகுதியாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, அவற்றில் சர்பிடால் என்ற சர்க்கரையும் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வைட்டமின் சி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் சர்பிடால் சர்க்கரை ஒரு லேசான மலமிளக்கியாக செயல்படுகிறது. அதாவது இந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் ஒரு நபர் மலச்சிக்கலில் இருந்து பெரிய அளவில் நிவாரணம் பெறுகிறார்.

பன்னீர் திராட்சை

black grape constption

பன்னீர் திராட்சை அல்லது உலர்ந்த பிளம்ஸ் மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. பன்னீர் திராட்சை மலமிளக்கிய விளைவுக்கு அறியப்படுகிறது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும்.

மலச்சிக்கலின் லேசான பிரச்சனை இருந்தால் இந்த பழங்கள் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

 

இந்த பதிவும் உதவலாம்: தலைவலியில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற சூப்பரான டீ!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

 Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]