வயது கூடும் போது பலவிதமான உடல் மற்றும் மனநிலை மாற்றங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் ஒரு சிலர் இளமையிலேயே வயதானவர் போல் தெரியலாம். மரபியல், சூரிய ஒளி மற்றும் சூரிய கதிர்களால் ஏற்பட்ட கருமை போன்ற பல காரணங்களினால் இது ஏற்படுகிறது. இளமையிலேயே வயது முதிர்வை தடுக்க, முறையான சரும பராமரிப்பு அவசியம்.
இதனுடன் உடல் அளவிலும் பலவீனமாக வயதானவர் போல் உணர்கிறீர்களா? இளமையிலேயே முதுமையை பிரதிபலிக்கும் ஐந்து அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்.
உலர்ந்த சருமம்
சரும வறட்சி மற்றும் அரிப்பு போன்ற காரணங்களினால் இளமையிலேயே வயதான தோற்றத்தை பெறலாம். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முறையாக அகற்றப்படாமல், அவை தொடர்ந்து அதிகரிக்கும் போது இது போன்ற நிலைகள் உருவாகலாம். இதனால் சருமத்தின் பொலிவும் பளபளப்பும் குறைகிறது.
கருந்திட்டுக்கள்
பெரும்பாலும் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு முகம் மற்றும் கைகளில் சரும நிறத்தை விட கருமையான திட்டுக்கள் ஏறபடலாம். பல ஆண்டுகளாக அதிக சூரிய ஒளியில் வெளிப்படுபவர்களுக்கு இது போன்ற கருந்திட்டுக்கள் ஏற்படுகின்றன. இவை உங்களுக்கு வயதான தோற்றத்தை கொடுக்கலாம்.
மெதுவான நடை
உங்கள் நடையின் இயல்பான வேகம் குறைந்தால் அது முதுமையின் அறிகுறியாக இருக்கலாம். standard.co.in நடத்திய ஆய்வின்படி, மெதுவாக நடக்கும் நடுத்தர வயது பெரியவர்களின் மூளை மற்றும் உடல் இளமையிலேயே முதுமை அடைந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
மெல்லிய கொடுகள் மற்றும் சுருக்கங்கள்
நம் சரும அமைப்பை பராமரிக்க கொலாஜன் எனும் புரதம் அவசியமானது. ஆனால் வயது கூடும் போது சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையலாம். இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் உண்டாகின்றன. தூக்கமின்மை, மன அழுத்தம், சூரிய ஒளியில் அதிகம் வெளிப்படுவது போன்ற காரணங்களினால் இது ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டை சீராக்க மஞ்சள் போதும்
கைகளில் நிறமாற்றம்
மற்ற உடல் பாகங்களை விட விரைவாக முதுமை அடைவது நம் கைகள் தான், ஏனெனில் அவை அதிக சூரிய பாதிப்புக்கு ஆளாகின்றன. இளமையில் வயது முதிர்வை காட்டும் இந்த அறிகுறியை பலரும் புறக்கணிக்கிறார்கள். தொடர்ச்சியாக சூரியனின் UV கதிர்களுக்கு வெளிப்படும் போது கைகள் சேதமடைகின்றன. இதன் விளைவாக சுருக்கங்கள், சரும தொய்வு மற்றும் கைகளில் நிறமாற்றமும் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 50 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? தினமும் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்யுங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation