Anti Aging Tips in Tamil: 50 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? தினமும் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்யுங்கள்

தினமும் காலையில் இந்த விஷயங்களை தவறாமல் செய்தால் நீண்ட காலத்திற்கு உங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். அதை பற்றி இந்த பதிவில் விவரித்துள்ளோம். 

antiaging tips

வயது கூட கூட அதன் தாக்கம் முகத்தில் தோன்ற தொடங்குகிறது. ஆனாலும், நாம் அனைவரும் என்றுமே இளமையாக இருக்க விரும்புகிறோம், இல்லையா? இளமையாக இருப்பதற்கு உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வதில் தொடங்கி நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் அது மட்டும் அல்ல.அதையும் தாண்டி பல விஷயங்கள் உங்கள் இளமை தோற்றத்தை பாதிக்கிறது. உங்கள் தோரணையிலிருந்து நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறீர்களா? உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வை எவ்வளவு சிறப்பாக கவனித்துக்கொள்கிறீர்கள்? என பல இதில் அடங்கும்.

நீங்கள் சில எளிய டிப்ஸ்கள் அல்லது சில வாழ்க்கைமுறை மாற்றங்களைத் தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் இளமையாக தோற்றமளிக்க மற்றும் உணர, 50 வயதிற்கு பிறகும் இளமையாக இருப்பதற்கான வழிகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

இளமையாக இருக்க காலையில் செய்யக்கூடிய சில வேலைகளை பற்றி பேச போகிறோம். ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் தேடும் ஆலோசனையை இங்கே பெறலாம். ஃபிட்னஸ் மற்றும் யோகா நிபுணர் ரீட்டா கனாபர் ஜி இந்த டிப்ஸ்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

முதல் வேலை

தினமும் காலையில் எழுந்து மலாசன் யோகா போஸில் அமர்ந்து வெந்நீர் அருந்த வேண்டும். ஏனெனில் தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் இரத்த ஓட்டம் மேம்படும். இவ்வாறு தொடர்ந்து உட்காருவது வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும், வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவும். இதனால் முகம் பளபளப்பாகவும் இருக்கும்.

இரண்டாவது வேலை

ஊறவைத்த உலர்ந்த பழங்கள் (வால்நட், பாதாம், அத்திப்பழங்கள்) மற்றும் பருவகால பழங்களை உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுங்கள். உடற்பயிற்சிக்கு முன் நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்திலும்

உட்பட கழிவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. இது தவிர, தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மோசமான விளைவை ஏற்படுத்தும். ஜிம்மிற்கு செல்வதற்கு முன், எந்தவொரு நபரும் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும்.

antiaging health

மூன்றாவது வேலை

30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம், உடற்பயிற்சி தோல் செல்களை வளர்க்கவும், உயிர்ப்பிக்கவும் உதவுகிறது. தோல் உட்பட உடல் முழுவதும் செயல்படும் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை ரத்தம் கொண்டு செல்கிறது.

ஆக்ஸிஜனை வழங்குவதோடு, ரத்த ஓட்டம் வேலை செய்யும் உயிரணுக்களிலிருந்து ஃப்ரீ ரேடிக்கல்கள்

நான்காவது வேலை

30 முதல் 45 நிமிடங்கள் யோகா (ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் மற்றும் பிரார்த்தனை) செய்யுங்கள். யோகா ஆழ்ந்த சுவாசத்தை செயல்படுத்தி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை இயல்பாக்க உதவுகிறது மற்றும் தசைகளை தளர்த்துகிறது. இது சருமத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

food health

ஐந்தாவது வேலை

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.ஆம்! ஆரோக்கியமான காலை உணவு மிகவும் முக்கியமானது, காலை காலை உணவு நாள் முழுவதும் வேலை செய்வதற்கான ஆற்றலை அளிக்கிறது. காலையில் சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாக உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:இரவு தூங்க செல்வதற்கு முன் செய்ய வேண்டிய சிறந்த உடற்பயிற்சிகள்

இங்கே குறிப்பிட்டுள்ள டிப்ஸ்களை முயற்சிப்பதன் மூலம், நீங்களும் 50 வயதிற்கு பிறகும் இளமையாக காட்சியளிக்கலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP