Night Workout in Tamil: இரவு தூங்க செல்வதற்கு முன் செய்ய வேண்டிய சிறந்த உடற்பயிற்சிகள்

உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனைகளை விரட்ட இரவு தூங்குவதற்கு முன்பு இந்த உடற்பயிற்சியைச் செய்தாலே போதும். 

workout night sleeping

இன்று காலை ஜிம்மிற்கு செல்லவில்லையா? உடற்பயிற்சி செய்யவும் நேரம் கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள். இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான ஒரு உடற்பயிற்சி குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறோம். இதைச் செய்வதன் மூலம், உங்கள் உடலின் கீழ் பகுதியைச் சரியான வடிவத்தில் வைத்துக்கொள்ளலாம்.

படுக்கைக்கு முன் உடற்பயிற்சி செய்வது முடியாத காரியம் என பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், இரவு தூங்க செல்வதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது வழக்கமான கடமையாக மாறும் போது, தூக்கம் மேம்படுகிறது என்பதை பல அறிவியல் சான்றுகள் உணர்த்துகின்றன.

ஆம், தவறாமல் உடற்பயிற்சி செய்வது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உட்கார்ந்தப்படியே வேலை செய்யும் வாழ்க்கை முறையைத் தவிர்த்து உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உங்களின் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதிலிருந்து உங்கள் தூக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகித்தல் வரை தினசரி உடற்பயிற்சிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகின்றன. அதற்கு, உங்களுக்கான சரியான உடற்பயிற்சி முறையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும்.

பிரபல உடற்பயிற்சியாளர் ஜூஹி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த உடற்பயிற்சி குறித்து பதிவிட்டு அதனுடன் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் 'இந்த உடற்பயிற்சியை இரவு நேரத்தில் செய்வதன் மூலம் உடல்நலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும். 10 நிமிடம் கால்களை சுவரில் தூக்கி வைக்கும் இந்த உடற்பயிற்சி, உங்கள் தினசரி இரவு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். கால்களுக்கு இப்படி தளர்வு கொடுப்பது மிகவும் நல்லது. அதே போல் உட்கார்ந்தப்படியே வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளையும் இது குறைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கால்களைச் சுவரில் வைக்கும் முறை

  • இதைச் செய்வதற்கு உங்கள் முதுகு, தரையில் படுமாறு மல்லாந்து படுக்கவும்.
  • பிறகு உங்கள் கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் உங்கள் தோள்களை லேசாச தூக்கி, தரையில் இருக்கும் 2 கால்களையும் மேலே உயர்த்தி சுவரில் வைக்கவும்.
  • உங்கள் உடலின் மற்ற பகுதிகளை அசைக்காமல் கால்களை மட்டும் சுவரில் சில வினாடிகளுக்கு வைத்திருக்கவும்.
  • இப்படியே 10 முறை ரிபீட் செய்யவும்.

midnight workout

கால்களைச் சுவரில் வைப்பதால் கிடைக்கும் பயன்கள்

  • இது வெர்கோஸ் வெயின்ஸ் எனப்படும் நரம்பு சுருள் பிரச்சனையைச் சரிசெய்கிறது.
  • கர்ப்ப காலத்தில் பாதங்களின் வீக்கத்தைக் குறைக்கிறது.
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • பாரா சிம்பேடிக் நரம்பு மண்டலத்தைச் செயல்படுத்துகிறது.
  • கால்களுக்குத் தளர்வுகளை தந்து நல்ல தூக்கத்தைத் தூண்டுகிறது.
  • நீங்களும் இந்த உடற்பயிற்சியை தினமும் செய்து உடலின் கீழ் பகுதியைச் சரியான வடிவத்தில் வைத்து கொள்ளுங்கள், நல்ல தூக்கத்தையும் பெறுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:தொங்கும் மார்பகங்களை சரிசெய்ய இந்த உடற்பயிற்சிகளை செய்தால் போதும்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP