Exercise for Saggy Breast in Tamil: தொங்கும் மார்பகங்களை சரிசெய்ய இந்த உடற்பயிற்சிகளை செய்தால் போதும்

பெண்களின் தளர்ந்த மார்பகங்களை சரிசெய்ய தினமும் 10 நிமிடம் இந்த 3 உடற்பயிற்களை செய்தாலே போதும். 

women breast

மார்பகங்களை பொறுத்தவரை, பெண்கள் எப்போதும் லிப்ட், ஃபுல்லர், ரவுண்டர் என சரியான அளவிலான மார்பகங்களை எதிர்பார்க்கிறார்கள். பல்வேறு காரணங்களால் பெண்களின் மார்பகங்கள் தளர்ந்து விடுகின்றன. அதை சரிசெய்ய நினைக்கும் பெண்களில் நீங்களும் ஒருவரா? இந்த பதிவை முழுமையாக படியுங்கள். தளர்ந்த மார்பகங்களை நினைத்து கவலை கொள்வதை விட்டுட்டு ஏன் நீங்கள் உடற்பயிற்சி மூலம் அதை சரிசெய்ய கூடாது? மார்பகங்களை ஆரோக்கியமாகவும் சரியான வடிவத்தில் வைத்திருக்கவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

தளர்வான மார்பகங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதும் பொதுவான காரணமாகும். இருப்பினும், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியமானது. அதே சமயம் தாய்ப்பால் கொடுக்கும் போது முறையான வழிகளை பின்பற்றாததால் பெண்ணின் மார்பகங்களை சீக்கிரத்தில் தளர்ந்து விடுகின்றன. இது தவிர சரியான அளவில் பிரா அணியாமல் இருந்தாலும் மார்பகங்கள் தளர்ந்து விடும். மார்பகத்தின் அளவை விட பிரா சிறியதாக அல்லது பெரியதாக இருந்தாலும் இதுப்போன்று நடக்கும்.

தளர்வான மார்பகங்களை சரிசெய்து அதை நேராக்க விரும்பினால் நீங்கள் இந்த 3 உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். வாரத்திற்கு 3-4 முறை இந்த உடற்பயிற்சிகளை செய்தால் 4 வாரங்களில் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். தளர்ந்த மார்பகங்களை சரிசெய்யும் 3 உடற்பயிற்சிகள் இதோ

டைமண்ட் புஷ் அப்கள்

  • தளர்ந்த மார்பகத்தை உயர்த்துவதற்கான சிறந்த பயிற்சிகளில் இதுவும் ஒன்று.
  • இந்த பயிற்சியை நீங்கள் புஷ்-அப் நிலையில் தொடங்கவும்.
  • பின்னர் உங்கள் ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் முக்கோண வடிவில் சேர்த்து மார்பகத்தின் கீழே தரையில் வைக்கவும்.
  • இப்போது உங்கள் முழங்கைகளை நன்கு வளைத்து, முடிந்தவரை தலை மற்றும் உடல் தரையை தொடும் வரை குனியவும்.
  • பின் உள்ளங்கைகளை அழுத்தி உடலை மேலே கொண்டு வந்து நிமிரவும்.
  • இப்படியே 10 முறை செய்யவும்.

சேர் உடற்பயிற்சி

  • சேரின் முனையில் உட்காரவும். உங்களின் 2 கைகளும் ஷேரின் இரண்டு ஓரங்களை பிடித்தவாறு இருக்க வேண்டும்.
  • பின்பு ஷேரில் இருந்து இடுப்பை இறக்கி கீழே மேலே என உட்கார்ந்து உட்கார்ந்து எழவும்.
  • இப்படி செய்யும் போது உங்களுடைய தோள்பட்டை காதுக்கு அருகில் இருந்து விலகி பரந்து இருக்க வேண்டும்.
  • உங்கள் முழங்கைகளை 90 டிகிரிக்கு வளைத்து ஒவ்வொரு முறையும் உட்கார்ந்து எழு வேண்டும்.
  • ஒருமுறை செய்யும்போது 10 தடவை உட்கார்ந்து எழு வேண்டும். இப்படி 2 முறை செய்தாலே போதும்.

breast practise

முழங்கால்களை வளைத்து புஷ் – அப்கள்

  • உங்கள் முழங்கால்களை தரையில் வைத்து புஷ் அப் எடுக்கவும்.
  • இந்த முறையில் கால்விரல்கள் தரையில் படாது. முட்டி மட்டுமே தரையை தொட்டு இருக்கும்.
  • கால்கள் மேலே தூக்கியப்படி இருக்கும்.
  • வழக்கமாக புஷ் அப் செய்வது போலவே செய்ய வேண்டும்.
  • இயல்பு நிலைக்கு திரும்பும் போதும் தலையை கீழே தாழ்த்தி கால்களை தரையில் விரித்து எழுந்திருக்க வேண்டும்.
  • ஓவ்வொரு முறையும் 10 தடவை புஷ் அப் எடுக்க வேண்டும். இப்படியே 5 முறை செய்தால் போதும் .

தளர்ந்த மார்பகங்களை நேராக்க இந்த 3 உடற்பயிற்சிகளை 10 நிமிடம் செய்தால் போதும். நல்ல மாற்றம் கிடைக்கும். அதே போல் எப்போதுமே இந்த உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன்பு வார்ம் அப் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP