பசியின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? நீங்கள் சரியாக சாப்பிடாமல் இருப்பதால், உடல் எடைகுறைகிறதா ? பசி இல்லாமல், உடல் எடையும் குறைந்து போனதால் நீங்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறீர்களா? பசியை ஏற்படுத்தக்கூடிய சில மருந்துகளை சாப்பிடுகிறீர்களா? இந்த எல்லா கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் 'ஆம்' என்றால், இப்போது உங்களுக்கு பசியை தூண்டி உங்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பசியை அதிகரிக்க வைக்க பலவிதமான மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவார்கள். நீங்கள் விரும்பினால், யோகா பயிற்சி மூலம் அருமையான தீர்வு கிடைக்கும். உண்மையில், வயிற்றில் ஏதாவது பிரச்சினை என்றால், பசியே இல்லாமல் போய் விடும். ஆனால் யோகா பயிற்சி செய்வது மூலம் உங்களுடைய பிரச்சினை இயற்கையிலேயே குணமாகி விடும். யோக பயிற்சியாளர் மற்றும் மகளிர் ஆரோக்கிய ஆய்வு மையத்தின் செயலாளர் டாக்டர். நேஹா வசிஷ்ட் கார்கி சில யோகாசன பயிற்சிகளை நமக்கு கற்று தர போகிறார். இதன் மூலம் உங்களுக்கு பசி இயற்கையிலேயே அதிகரிக்கும்.
இதுவும் உதவலாம்:எந்த நேரத்தில் யோகா செய்வதால் அதிக பலன் கிடைக்கும் தெரியுமா?
வஜ்ராசனம்
வஜ்ராசனம் பசியை தூண்டும் ஒரு சிறப்பான ஆசனமாகும். இந்த ஆசனத்தை நீங்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்யலாம்.
வஜ்ராசனம் சரியான முறையில் செய்ய வேண்டும்.
- முதலில், நீங்கள் முட்டி போட்டு உட்கார வேண்டும்.
- இந்த நிலையில் உங்கள் இரு கால்களுக்கு நடுவில் இடைவெளி இருக்க கூடாது.
- இரண்டு தொடையும் ஒட்டி இருக்க வேண்டும்.
- இரண்டு கால் பாதங்களில் உள்ள கட்டை விரல்கள் சேர்ந்தபடி இருக்க வேண்டும்.
- முட்டியை மடக்கிய பிறகு, தொடை பகுதி உங்கள் குதிகாலில் உட்கார வேண்டும்.
- இப்போது உங்கள் இடுப்பு நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். உள்ளங்கைகள் முட்டியை தொட வேண்டும்.
- உங்கள் முட்டிகளும் சேர்ந்த படி இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும்.
- இப்போது சாதாரணமாக மூச்சு விடவும். கவனம் மூச்சின் மீது இருக்க வேண்டும்.
புஜங்காசனம்
பொதுவாக, பசி இல்லாமல் இருக்க முக்கிய காரணமாக இருப்பது வயிறு கோளாறு தான். இது போன்ற சமயத்தில், புஜங்காசனம் செய்யலாம். இந்த ஆசனம் நம் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.
- புஜங்காசனம் செய்ய, முதலில் ஒரு பாய் விரித்து, அதன் மீது குப்புறப்படுத்துக் கொள்ளுங்கள்
- வயிறு பாயில் ஒட்டி இருக்க வேண்டும். அப்படியே ஓய்வு எடுக்கும் நிலையில் படுக்க வேண்டும். இரண்டு கைகளும் இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். கால்களுக்கு இடையே இடைவெளி இருக்க வேண்டும்.
- இப்போது இரண்டு கைகளுக்கும் அழுத்தம் கொடுத்து ஊன்றி, முன் பக்க உடலை மட்டும் மேலே தூக்க வேண்டும்.
- இந்த நிலையில், தலையை தூக்கி வானத்தை பார்க்க வேண்டும்.
- மூச்சை இழுத்து சாதாரணமாக விட வேண்டும். சில நிமிடங்கள் இதே நிலையில் இருக்கவும். பின் பழைய நிலைக்கு திரும்பவும்.
- இந்த ஆசனத்தை உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் செய்யலாம்.
தனுராசனம்
இந்த ஆசனத்தை வில் வடிவம் என்பார்கள். ஏனென்றால் இதில் உடல் வில் போல் வளைந்து இருக்கும். உடல் எடையை குறைக்க இந்த ஆசனம் சிறந்தது என்று கூறப்படுகிறது. இத்துடன் சேர்ந்து, இது நம் செரிமான மண்டலத்தை மேன்மையாக்கும். இதனால் பசியின்மை பிரச்சனை நீங்கி விடும்.
- தனுராசனத்தை பயிற்சி செய்ய, ஒரு பாய் விரித்து குப்புறப்படுக்கவும். அதாவது பாயில் வயிறு ஒட்டி இருக்க வேண்டும்.
- உங்கள் இரு பாதங்களுக்கு இடையே இடைவெளி இருக்க வேண்டும்.
- இப்போது முட்டியை மடக்கி காலை மேலே தூக்க வேண்டும். உங்கள் கணுக்கால்களை கைகளில் பிடித்து கொள்ள வேண்டும்.
- உங்கள் நெஞ்சு மற்றும் கால்களை மேலே தூக்க வேண்டும். இந்த நிலையில், உங்கள் கைகள் மற்றும் தொடைகள் விரிவடைவதை நீங்கள் உணர்வீர்கள்.
- இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து விட்டு, பின்னர் பழைய நிலைக்கு மெதுவாக திரும்ப வேண்டும்.
குறிப்பு: உங்களுக்கு வேறு எதாவது உடல் நல பிரச்சனைகள் இருந்தால், யோகா பயிர்சியாளரின் ஆலோசனையுடன் செய்வதே சிறந்தது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation