Yoga to Get Rid of Constipation: மலச்சிக்கலை போக்கும் யோகாசனங்கள்

தினமும் காலையில் மலம் கழிக்க சிரமமாக இருந்தால், மலச்சிக்கலிலிருந்து விடுபட இந்தக் யோகாசனங்களை முயற்சி செய்யலாம்.

Constipation yogas

காலையில் மலம் கழிக்காவிட்டால், நாள் முழுவதும் வயிற்று வலி, வாயு, மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது பல பெண்கள் அன்றாடம் சமாளிக்கும் நிரந்த பிரச்சனையாகவே மாறிவிட்டது.

இதனால் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமின்றி, மனதளவிலும் எந்த ஒரு இடத்திலும் உங்களால் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. மலச்சிக்கலை போக்கி வயிறை சுத்தம் செய்ய உதவும் சில யோகாசனங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நிபுணர் கருத்து

யோகா நிபுணர், கொடையாளி, சமய குரு மற்றும் வாழ்க்கை முறை பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் அக்ஷர் அவர்கள் பின்வரும் தகவலை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, 'மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஒரு தீவிரமான பிரச்சனையாகும். ஒழுங்கற்ற குடல் இயக்கம் காரணமாக விடாப்படியான உப்புச உணர்வு ஏற்படுகிறது.

நாள்பட்ட மலச்சிக்கல் குடல் அடைப்பு போன்ற தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. மலம் கழிக்கும் முறைகள் நபருக்கு நபர் வேறுபட்டு இருப்பதால், எது இயல்பானது என்பது அவரவருக்கு மட்டுமே தெரியும்’

மலச்சிக்கலுக்கான யோகாசனங்கள்

நிபுணரின் கருத்துப்படி, யோகா மலச்சிக்கலிலிருந்து பெரும் நிவாரணம் அளிக்கிறது, ஏனெனில் இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, மலம் மற்றும் வாயுவை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கலும் நீங்கும். யோகா நிபுணரின் இந்த 5 ஆசனங்களை வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். தலையணை / நாற்காலி போன்றவற்றை ஆதரவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தோரணைகளையும் 30 வினாடிகளுக்கு வைத்திருந்து, 3 முறை திரும்பச் செய்யுங்கள்.

1. ஹலாசனா

yoga for constipation female

  • இதைச் செய்ய, உங்கள் முதுகு தரையில் படும்படி படுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் உள்ளங்கைகளை உடலுக்கு அருகில் தரையில் வைக்கவும்.
  • வயிற்று தசைகளைப் பயன்படுத்தி, கால்களை 90 டிகிரி உயர்த்தவும்.
  • உள்ளங்கைகளை தரையில் வழுவாக ஊனி, உயர்த்திய கால்களை மெதுவாகக் கீழ் இறக்கி தலைக்குப் பின்னால் இருக்கும் தரையை தொட அனுமதிக்கவும்.
  • கால்விரல்கள் பின்னால் இருகக்கூடிய தரையைத் தொடும் வகையில் நடுத்தர மற்றும் கீழ் முதுகை தரையிலிருந்து எழும்ப அனுமதிக்கவும்.
  • மார்பை முடிந்தவரை கீழ் தாடைக்கு அருகில் கொண்டு வர முயற்சிக்கவும்.
  • பின்புறத்தை ஆதரிக்க, உள்ளங்கைகள் தரையில் தட்டையாக வசதிக்கு ஏற்ப வைத்துக்கொள்ளலாம்.
  • இந்தத் தோரணயில் சிறிது நேரம் இருங்கள்.

2. வஜ்ராசனம்

yoga for constipation

  • இந்த ஆசனத்தை நேராக நின்று தொடங்குங்கள்.
  • உங்கள் முழங்கால்களை மெதுவாக முன்னோக்கி சாய்த்து பாயில் அமருங்கள்.
  • குதிகால் மீது இடுப்பை வைத்து, கால்விரல்கள் வெளிப்புறத்தை நோக்கி இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.
  • கன்றுத் தசைகள் தொடைகளிலிருந்து அழுத்தப்பட வேண்டும்.
  • கணுக்கால்களை ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைக்கவும்.
  • கால்விரல்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்காமல் அருகில் இருக்கும்படி வைக்கவும்.
  • முழங்காலில் உள்ளங்கைகளை மேல்நோக்கியவாறு வைத்திருக்கவும்.
  • உங்கள் முதுகை நேராக்கி, முன்னால் பாருங்கள்.
  • இந்தத் தோரணையில் சிறிது நேரம் இருங்கள்.

3. நௌகாசனா

yoga for constipation issue

  • உங்கள் முதுகு தரையை தொடும்படி படுத்துக் கொள்ளுங்கள்.
  • மேல் உடலைத் தரையிலிருந்து 45 டிகிரிக்கு கொண்டு வரவும்.
  • உடலின் எடையை இடுப்பினால் சமநிலைப்படுத்தி, கால்களையும் தரையிலிருந்து 45 டிகிரிக்கு உயர்த்தவும்.
  • கால்விரல்களை கண்களுடன் ஒரே நேர் கோட்டில் வைக்க வேண்டும்.
  • முழங்கால்களை வளைப்பதைத் தவிர்க்கவும்.
  • கைகளைத் தரைக்கு இணையான நிலையில் வைக்கவும்.
  • வயிற்று தசைகளை இறுக்குங்கள்.
  • பின்புறத்தை நேராக்குங்கள்.

4. பிரபதாசனம்

  • பிரபதாசனம் செய்ய மலாசனா அல்லது வஜ்ராசனத்திலிருந்து தொடங்குங்கள்.
  • பாதங்களை ஒன்றாக இணைத்துக் கணுக்கால்களை தரையிலிருந்து மெதுவாகத் தூக்கவும்.
  • உடலைக் கால்விரல்களில் சமநிலைப்படுத்தி, பின்புறத்தை நேராக வைக்கவும்.
  • உள்ளங்கைகளை ஒன்றாகச் சேர்த்து புருவங்களுக்கு இடையில் கவனம் செலுத்துங்கள்.
  • இந்தத் தோரணையில் 10-20 விநாடிகள் சுவாசிக்கவும்.
  • இந்தத் தோரணையிலிருந்து வெளியே வர, உங்கள் கணுக்கால்களை கீழே இறக்கி, மலாசனாவிற்கு திரும்புங்கள்.
  • 3 தொகுப்புகளாக மீண்டும் செய்யவும்.

5. மலாசனா

yoga for constipation problem

  • இந்த யோகாவை தொடங்குவதற்கு முதலில் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
  • முழங்கால்களை வளைத்து, இடுப்பைக் கீழ் இறக்கி குதிகால்கள் மேல் வைக்கவும்.
  • கால்கள் தரையில் தட்டையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உள்ளங்கைகளை பாதங்களுக்கு அருகில் தரையில் வைக்கலாம் அல்லது பிரார்த்தனை தோரணையில் மார்பின் முன் இணைத்து வைக்கலாம்.
  • இதை செய்யும்போது முதுகெலும்பு நேராக நிலைத்திருக்கும்.

மலச்சிக்கல் ஒரு நோய் அல்ல என்றாலும், இது பக்கவாதம், நீரிழிவு மற்றும் நடுக்குவாதம் போன்ற பிற மருத்துவ பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டால், குடலில் அடைப்பு அல்லது மலக்குடல் எரிச்சல் நோய் (IBS) உள்ளிட்ட பெருங்குடல் அல்லது மலக்குடலின் பிரச்சினைகளாக இருக்கக்கூடும். நீடித்த மலச்சிக்கல் ஏற்பட்டால் சரியான நோயறிதலுக்காக உங்கள் மருத்துவரை அணுகவும்.

இந்த பதிவும் உதவலாம்: தரையில் உட்காருவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனைக்குத் திறம்பட சிகிச்சை அளிக்க முடியும். தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரித்து, காஃபின் பானங்களின் அளவைக் குறைக்கவும், ஏனெனில் அவை நீரிழப்புக்கு காரணமாகின்றன. இறைச்சி, பால், பாலாடைக்கட்டி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நபருக்குத் தினசரி 20 முதல் 35 கிராம் வரை நார்ச்சத்து பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

இந்த யோகாசனங்கள் மூலமாகவும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாகத் தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP