முன்பெல்லாம் தரையில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. இன்றளவும் நிறைய நாடுகளில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. சாப்பிடுவதை தவிர தரையில் அமர்ந்தபடி பல விஷயங்களை செய்யலாம். எவ்வளவு களைப்பாக இருந்தாலும் சரி தரையில் அமர்ந்தால் மனசு லேசாகி, களைப்பு எல்லாம் காணாமல் போய்விடும். தரையில் அமரும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?
தரையில் உட்காருவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆயுர்வேத நிபுணர் வரா யனமந்திரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இது குறித்துப் பேசுகையில், 'தரையில் அமர்வது தோரணையை மேம்படுத்துவதோடு நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். தரையில் அமர்வதால் ஏற்படும் நன்மைகளை டாக்டர் வரா அவர்களிடமிருந்து விரிவாக அறிவோம் வாருங்கள்.
நமது முதுகெலும்பு நேராக இல்லை என்பது நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். இது நமது கழுத்து, மார்பக மற்றும் இடுப்புப் பகுதிகளில் மூன்று இயற்கையான வளைவுகளைக் கொண்ட 'S' வடிவமைப்பில் உள்ளது. தவறான உட்காரும் தோரணையால் நிறைய பேருக்கு முதுகு வலி பிரச்சனை ஏற்படுகிறது. உங்களுக்கு ஆரோக்கியமான முதுகுத்தண்டு வேண்டுமெனில் தரையில் உட்காரும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம். மோசமான தோரணை மற்றும் முன்னோக்கியபடி சாய்ந்து நடப்பதும், உட்காருவதும் உங்கள் முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தரையில் உட்காருவதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் மிக முக்கியமாக, இது முக்கிய தசைகள் ஈடுபடுத்தி முதுகெலும்புக்கு நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது. இது உங்கள் சமநிலையை மற்றும் நிலைதன்மையை மேம்படுத்துகிறது. தரையில் உட்காருவது உங்கள் முழு உடலுக்கும் பலத்தை அளிக்கிறது.
நமது தொடை, கீழ் முதுகு மற்றும் இடுப்பு எலும்பை இடுப்புடன் இணைக்கும் மடக்கு தசைகள் ஹிப் ஃப்ளெக்சர்கள் என்றழைக்கப்படுகிறது. பலவீனமான மடக்கு தசைகள் உங்கள் நடை, நிலைத்தன்மை மற்றும் சமநிலையை பாதிக்கலாம். தரையில் உட்கார்ந்திருப்பது இந்த இடுப்பு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
நீங்கள் தரையில் உட்காரும் போது, உடலின் கீழ் பகுதியின் தசைகள் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நீங்கள் சாய்வதும் குறையும்.
ப்ரிவென்டிவ் கார்டியாலஜி ஜர்னல் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, 'ஆதரவு இல்லாமல் தரையில் கீழே அமர்ந்து எழுவது' ஆயுளை மேம்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த இயக்கம் மற்றும் முதுகெலும்பை வலுவாகவும், நெகிழ்வாகவும், நிலையானதாகவும் மாற்ற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
தரையில் உட்காரும் பொது சில நிமிடங்களாவது தொடர்ந்து உட்கார வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை நீங்கள் பெற விரும்பினால், தரையில் உட்காரும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். அவ்வாறு உட்காரும்போது பின்வரும் விஷயங்களை நினைவில் கொள்ளவும்
இந்த பதிவும் உதவலாம்: 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்!!!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]