சிலர் 7 மணி நேரம் தூங்கினால் போதும் என்றும், ஒரு சிலர் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றும் கூறுகிறார்கள். இதுபற்றிய உண்மையைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நாள் முழுவதும் கடினமாக உழைத்தபின், உடலுக்கு ஓய்வு கொடுக்க நல்ல தூக்கம் அவசியம். முழுமையான நல்ல தூக்கத்தை அனுபவித்தால், அடுத்த நாள் காலையில் உங்கள் மனநிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் அன்றய நாளில் மன நிம்மதியுடன் உற்சாகமாக வேலை செய்ய முடியும். இதனால் உங்கள் உற்பத்தி திறனும் சிறப்பாக இருக்கும்.
ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் மிகவும் முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், பதில் தெரியாத பல கேள்விகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. இதனால் தான் தூக்கம் தொடர்பான பல கட்டுக்கதைகளை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
இன்று அந்தக் கட்டுக்கதைகள் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பதிவில், ஒரு சராசரி மனிதனுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை தெரிந்துகொள்வோம். மேலும் மிகக் குறைவான நேரம் தூங்குவது அல்லது அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம்.
நல்ல தூக்கம் என்றால் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று பலர் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இது உண்மையா? ஆரோக்கியமான இளைஞர்களுக்கு 7-9 மணிநேர தூக்கம் போதுமானது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவையான தூக்கத்தின் அளவு வயதுக்கு ஏற்ப மாறுபடும்.
இந்த பதிவும் உதவலாம்: நாம் தூங்கும் நிலை குறித்து அறிய வேண்டியவை!!!
நம்மில் பலரும் உடலுக்குத் தேவையானதை விட அதிக நேரம் தூங்குகிறோம். இதனால் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் என்று எண்ணுவது தவறானது. சராசரியாகத் தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு 27% மற்றும் நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு 21% உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதகரிக்கிறது.
நீங்கள் குறைவான நேரம் மட்டுமே தூங்குகிறீர்களா?, உங்கள் உடலுக்குக் குறைவான தூக்கம் போதும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடலைக் குறைவான தூக்கத்திற்கு பழக்கப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானது. இது சாத்தியமில்லை என்று மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கை கூறுகிறது. சில ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, 6 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் உள்ள ஒருவர் செயலாற்றுவது மிகவும் அரிது. இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.
ஒவ்வொரு இரவும் 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்குபவர்கள், தூக்கமின்மையின் விளைவுகளுக்குப் பழக்கப்பட்டுவிடுகிறார்கள், ஆனால் அதற்காக அவர்களின் உடலுக்குக் குறைவான தூக்கம் தேவைப்படுகிறது என்பது அர்த்தமல்ல.
இந்த பதிவும் உதவலாம்: நாள் முழுவதும் தூக்க கலக்கமாகவே இருக்கிறதா? என்ன செய்யலாம்?
ஒரு குட்டி தூக்கம் ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுப்பதோடு சோர்வையும் குறைக்கிறது. இது உங்கள் உற்பத்தித்திறனுக்கு அவசியமான மனநிலையை மேம்படுத்துகிறது. ஒரு குட்டி தூக்கம் விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, உங்கள் செயல்திறன் மற்றும் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.
இருப்பினும், குட்டி தூக்கம் தூங்குவதில் சிலர் அசௌகரியமாகவும் உணர்கிறார்கள். ஒரு சிலருக்கு பகலில் தூக்கம் வராது. மேலும் சிலர் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் மிகவும் சோம்பேறியாக உணர்வார்கள்.
பொதுவாக, பெரும்பாலானவர்களுக்குப் பகல் வேளை குட்டி தூக்கம் இரவு தூக்கத்தை பாதிக்காது. ஆனால் நீங்கள் இரவில் தூக்கமின்மை அல்லது தடைப்பட்ட தூக்கத்தை அனுபவித்தால், குட்டி தூக்கம் இந்த பிரச்சனைகளை மிகவும் மோசமாக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன் பெற இதை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]