
வாழ்க்கையில் நிறங்கள் முக்கியத்துவம் பெற்றது, அதிலும் உணவு நிறங்கள் உடலுக்கி பல வகையான சத்துக்களை வழங்குகின்றது. வெவ்வேறு வண்ண உணவுகள் ஆரோக்கியத்தில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பழத்தின் நிறம் அதன் சிறப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய தெரிந்துக்கொள்வோம். குங்குமப்பூ அல்லது ஆரஞ்சு பழங்களின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரஞ்சு நிற பழங்களில் ஏராளமாக காணப்படுகின்றன. இந்த நிறத்தின் பழங்கள் வயதான எதிர்ப்பை குறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவியாக இருக்கிறது. இந்த பழங்கள் கண்புரை, இதய நோய்கள், மூட்டு பிரச்சினைகள் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குங்குமப்பூ நிறத்தில் இருக்கும் சில பழங்களில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற நொதி சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. பப்பாளியில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால் சருமத்தின் வீக்கத்தைக் குறைத்து ஆரோக்கியமாக்குகிறது. இது தவிர பப்பாளி சாப்பிடுவது வயிற்றுக்கு நன்மை பயக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணம், வயிற்று வலி மற்றும் வாயு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதனுடன் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் படிக்க: தூக்க எறியப்படும் அன்னாசி இலைகளில் இருக்கும் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
ஆரஞ்சு நிறத்தில் உள்ள கேரட் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளதால், இவற்றை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது கண்கள், சருமத்திற்கு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கேரட்டில் நல்ல அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும். இது தவிர கேரட்டின் நுகர்வு உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதை உட்கொள்வது இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஆப்ரிகாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க: தலைவலி, தூக்கமின்மை இரண்டிற்கும் தீர்வை கொடுக்கும் கொத்தமல்லி விதையுடன் சேர்க்கப்படும் ஏலக்காய் தேநீர்
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின்களின் பெரிய ஆதாரமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது பல பருவகால நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. அதே சமயம் ஆரஞ்சுப் பழத்தில் உள்ள பெக்டின் என்ற கலவையும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]