ஐஸ் பாத் எனும் குளிர்ந்த நீரில் குளியல் போடுவதற்கு முன்பாக அதனால் என்னால் நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் யோசித்து கொண்டிருந்தால் இந்த கட்டுரை உங்களுக்காகத் தான். மேலும் உடலை கடுமையான குளிருக்கு உட்படுத்துவது நல்லதா எனவும் நீங்கள் சிந்திக்க நேரிடும். ஆனால் ஐஸ் பாத் எடுப்பதால் சில நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஐஸ் பாத் எடுப்பது விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உகந்தது.
ஐஸ் பாத் பற்றி நாம் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்போம். சில ஆண்டுகளுக்கு முன்பு இது மிகவும் பிரபலமாக இருந்தது. ஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை பல நடிகர்கள், நடிகைகள் ஐஸ் பாத் எடுத்தனர். இது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்றும் அழைக்கப்பட்டது. நடிகை ஹன்சிகா கடந்த 2014ஆம் ஆண்டு ஐஸ் பக்கெட் சேலஞ்சை வெற்றிகரமாக செய்து தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டார்.
ஐஸ் கட்டிகள் நிறைந்த பக்கெட்டை தன் மீது ஊற்றிக் கொண்டார். அதன் பிறகு சிலர் இந்த சேலஞ்சை தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டு மிகவும் குளிர்ந்த நீரில் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு அமர்ந்து குளியல் போட்டனர். நடிகை சமந்தா கடந்த ஜூலை மாதம் பாலி தீவிற்கு சென்றிருந்த போது 4 டிகிரி செல்சியஸிற்கும் குறைவான நீரில் ஆறு நிமிடங்கள்வரை அமர்ந்து குளிர்ந்த நீரில் குளியல் போட்டார். விஷ்ணு விஷால், விஜய் தேவர்கொண்டா, வருண் தவான், பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் ஐஸ் பாத் எடுத்துள்ளனர்.
மிகத் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்ட பிறகு குளிர்ந்த நீரில் குளியல் போட்டாலோ அல்லது மூழ்கினாலோ உடலில் உள்ள புண், எரியும் தசைகளுக்கு நிவாரணமாக இருக்கும்.
மத்திய நரம்பு மண்டலத்திற்கும் இது உதவிகரமாக இருக்கும். குளிர்ந்த குளிர்ந்த நரம்பு மண்டலத்திற்கு தூக்கத்தில் உதவலாம். இதன் விளைவாக உடல் சோர்வு குறைவையும் நீங்கள் உணரலாம்.
ஐஸ் குளியல் எடுப்பது உடல் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் விளைவைக் குறைக்கலாம். இது மேம்பட்ட செயல்திறனுக்கு வழிவகுக்கும்.
மேலும் படிங்க Lemon Tea : லெமன் டீ குடித்தால் இத்தனை நன்மைகளா ?
குளிர்ந்த நீரில் குளிக்கும்போது மிகக் குளிர்ச்சியாக உணருவது குளிர்ந்த நீர் குளியலின் மிகவும் குறிப்பிடத்தக்க பக்க விளைவாகும். பக்க விளைவுகளை தவிர்த்து கருத்தில் கொள்ள வேண்டிய வேறு சில ஆபத்துகளும் உள்ளன.
மேலும் படிங்க Hibiscus Benefits : செம்பருத்தியின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்
ஏற்கனவே இருதய நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஐஸ் பாத் எடுக்கக் கூடாது. குளிர்ந்த நீர் குளியல் மற்றும் பனியில் மூழ்குவது இரத்த நாளங்களை சுருக்கி உடலில் இரத்த ஓட்டத்தைக் குறைத்து விடுகிறது. இரத்த ஓட்டம் தொடர்ந்து குறைந்தால் இதயத் துடிப்பு அல்லது பக்கவாத பாதிப்புகள் உண்டாகலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]