pregnancy infection: கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் தீர்க்கனுமா? இதோ சரியான தீர்வு!

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் தொற்று மற்றும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில் இந்த முயற்சிகளை செய்யலாம்.

pregnant infection

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடலில் பல மாற்றங்களை உணர்கிறார்கள். இந்த மாற்றங்களால் பெண்களின் உடலில் பல தொற்றுகள் மற்றும் நோய்கள் ஏற்படலாம். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, ஹார்மோன்கள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெண்கள் தொற்றுநோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுவது நிகழ்கிறது.

கர்ப்ப காலத்தில் பல தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதிப்புகள் ஏற்படும். அதனால்தான் கர்ப்ப காலத்தில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். மகப்பேறு மருத்துவப் பிரிவு டாக்டர் சாக்ஷி கோயல் இதை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றி சில ஆலோசனைகளை நமக்கு கூறியுள்ளார்

கர்ப்ப காலத்தில் தொற்று

pregnancy women

கர்ப்பிணிப் பெண்களுக்கு கேண்டிடியாஸிஸ், ஜிபிஎஸ், சிறுநீர் பாதை தொற்று (யுடிஐ) போன்ற பிறப்புறுப்பு அல்லது ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படலாம். இதனால் இன்ஃப்ளூயன்ஸா, மலேரியா மற்றும் ஜிகா போன்ற தொற்றுநோய்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த தொற்றுகள் அசௌகரியத்தையும் மற்றும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சரியான நேரத்தில் சிகிச்சை பெறவிட்டால் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அதேபோன்று கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்தின்போது வழக்கமான பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் இதனால் எந்தவொரு தொற்றுநோயையும் சீக்கிரம் குணப்படுத்த முடியும்.

கர்ப்ப காலத்தில் சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) சிறுநீரகத்திற்குச் சென்று தொற்றுநோயைப் பரப்புகிறது. இது முன்கூட்டிய பிரசவம் அல்லது குழந்தையின் எடை குறைந்த பிறப்புகளுக்கு வழிவகுக்கும். பிறப்புறுப்பில் பாக்டீரியா வஜினோசிஸ் மற்றும் ஈஸ்ட் தொற்று ஆகியவை குறைப்பிரசவத்திற்கும் அல்லது கருவின் சவ்வுகளின் சிதைவு அபாயத்தை ஏற்படுத்துகிறது.

தொற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகள்

pregnant infection

கர்ப்ப காலத்தில் தொற்றுநோயை விரைவில் நிறுத்துவது முக்கியம். நிபுணர்களின் இந்த குறிப்புகள் கர்ப்ப காலத்தில் தொற்று மற்றும் நோய்களைக் குறைக்க அல்லது தடுக்க உதவும்.

1. சுகாதார கவனம்

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவ வேண்டும், குறிப்பாக கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, சாப்பிடுவதற்கு முன், செல்லப்பிராணிகளைத் தொட்ட பிறகு மற்றும் டயப்பர்களை மாற்றிய பிறகு.

2. நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பது

கர்ப்பிணிப் பெண்கள் நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும், குறிப்பாக காய்ச்சல், சிக்கன் பாக்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற வைரஸ் தொற்று உள்ளவர்கள். மற்றவர்களின் கோப்பைகள், பாத்திரங்கள் மற்றும் துண்டுகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

3. தடுப்பூசி

கர்ப்பிணிப் பெண்கள் காய்ச்சல், ரூபெல்லா மற்றும் ஹெபடைடிஸ் போன்ற தொற்றுநோய்களிலிருந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க தடுப்பூசி போட வேண்டும். ஃப்ளூ ஷாட் போன்ற தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பு தன்மையை உறுதி செய்கிறது

4. ஆரோக்கியமான உணவு

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிட வேண்டும்.

5. வழக்கமான பரிசோதனைகள்

கர்ப்ப காலத்தில் வழக்கமான பரிசோதனைகள் அவசியம். இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும். கர்ப்ப காலத்தில் தொற்று ஏற்படுவது பொதுவானது. இருப்பினும் கண்டறியப்படாத அல்லது சிகிச்சை அளிக்கப்படாத நோய்த்தொற்றுகள் பல கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் ஆதலால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பம் தரிக்க திட்டமிடுகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்


கர்ப்ப காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், கட்டுரைக்கு கீழே உள்ள கருத்து பெட்டியில் எங்களிடம் கூறுங்கள், அதை எங்கள் கட்டுரை மூலம் தீர்க்க முயற்சிப்போம்.

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP