Cucumber Benefits in Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்?

கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்து அதிகம் தேவைப்படுவதால் வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

cucumber pregancy

வெள்ளரிக்காயில் வைட்டமின் C, K, B, பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் இருக்கின்றது. கர்ப்ப காலத்தில் பெண்கள் வெள்ளரிக்காயை எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து இருக்க வேண்டும், அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் உடலில் நீர் தேக்கத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளிரிக்காய் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

cucumber pregancy

வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் பி6, பி9 போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. மனநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி மனநிலை மாற்றங்கள் மற்றும் பதட்டத்தை ஏற்படும், அத்தகைய சூழ்நிலையில் வெள்ளரிக்காய் பயன்படுகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

வெள்ளரிக்காயில் பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளதால் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். அதனால் இரத்த அழுத்தத்தை சமநிலையை பராமரிக்க வெள்ளரிக்காய் உதவும்.

நீரிழப்பைத் தடுக்கிறது

cucumber pregancy

வெள்ளரிகளில் ஏராளமான தாதுக்களுடன் தண்ணீர் இருக்கும் காரணத்தால் எலக்ட்ரோலைட் சமநிலையில் இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் வெள்ளரிகள் அதை கவனித்துக் கொள்ளும்.

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உங்களுக்கு ஒவ்வாமை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை பரிந்துரையின் படி சாப்பிட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் தீர்க்கனுமா? இதோ சரியான தீர்வு!

உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்கள் கட்டுரைகள் மூலம் உங்கள் சிக்கலை தீர்க்க முயற்சிப்போம்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் இதுபோன்ற கட்டுரையை படிக்க herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP