மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றன. மழை நின்ற பிறகு இரண்டு நாட்களுக்கு நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பிவிடும். ஆனால் மழைக்கால நோய்களால் பாதிப்படைவதை தவிர்க்க நாம் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் உடல்நலக்குறைவு ஏற்படுத்தும் நோய்கள் பற்றி தற்போது தெரிந்து கொள்ளுங்கள்.
மலேரியா
மலேரியா என்பது கொசுக்களால் பரவும் இரத்த நோயாகும். பிளாஸ்மோடியம் எனப்படும் ஒட்டுண்ணியால் மலேரியா ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சைகள் இருந்தாலும் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகவும் கடுமையானது. காய்ச்சல், நடுக்கம், தலைவலி ஆகியவை மலேரியாவின் அறிகுறிகளாகும். கொசுக்கடியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் மலேரியாவில் இருந்து தப்பிக்கலாம்.
தற்காப்பு
- முழு கை மற்றும் நீண்ட ஆடைகளை அணிதல்
- கொசுக்கள் பெருக்கத்தை தடுக்க தண்ணீர் தேங்குவதை தவிர்த்தல்
டெங்கு
இது கொசு மூலம் பரவும் மற்றொரு நோய்த்தொற்று ஆகும். AEDES எனப்படும் கொசுவின் கடியால் டெங்கு பரவுகிறது. டெங்குவினால் காய்ச்சல், கடுமையான குளிர், தலைவலி மற்றும் உடல்வலி ஏற்படும். உடலில் உள்ள இரத்த தட்டுக்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். நீரிழப்பு அபாயமும் உண்டு. பாராசிட்டமால் எடுத்துக் கொண்டாலும் காய்ச்சல் சற்று குறைந்தாலும் அது தொடரும். டெங்கு தடுப்பு மலேரியாவைப் போலவே உள்ளது. எனினும் டெங்கு கொசுக்கள் தேங்கி நிற்கும் நன்னீருக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதனால் தண்ணீர் சேமிக்கும் கொள்கலன்களை நன்றாக மூடி வைக்க வேண்டும்.
எலி காய்ச்சல்
எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் ஒருவகையான பாக்டீரியா தொற்றாகும். எலிகளின் கழிவுகளிலிருந்து வெளியேறும் பாக்டீரியா தண்ணீரில் கலக்கும் போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. கடுமையான தலைவலி, வாந்தி, இரத்தப்போக்கு, மஞ்சள் காமாலை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
தற்காப்பு
- அசுத்தமான தண்ணீரில் நடப்பதை தவிர்க்கவும்
- கால்களை மறைக்கும் வகையில் பூட்ஸ் அணிவது நல்லது
- கால்களைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்
- பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவரை உடனடியாக அணுகவும்.
சுவாச நோய்த்தொற்றுகள்
ஈரமான காலநிலை காரணமாக காய்ச்சல் மற்றும் பிற சுவாச வைரஸ் தொற்றுகள் எளிதாக ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இது பொதுவாக ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்
தற்காப்பு
- நெரிசலான இடங்களைத் தவிர்த்தல்
- மாஸ்க் அணிவது
- கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல்
- காய்ச்சலுக்கு ஊசி செலுத்தி கொள்வது
இரைப்பை குடல் தொற்றுகள்
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர், உணவில் நிறைய ஈக்கள் மொய்ப்பதால் இரைப்பை குடல் தொற்றுகள் ஏற்படலாம். ஹெபடைடிஸ் ஏ & ஈ போன்ற மஞ்சள் காமாலையை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களே இதற்கு முக்கிய காரணமாகும்.
மேலும் படிங்கசளி, இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வளிக்கும் பாட்டி வைத்தியம்!
தற்காப்பு
- சாலையோரை உணவைத் தவிர்ப்பது
- தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது
- சாப்பிடும் முன் கைகளைக் கழுவுவது
- சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல்
இந்த நோய்களுக்கு நீங்கள் உரிய தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டால் உடல்நலம் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation