அன்றாட வாழ்க்கையில், இதுபோன்ற பல தவறுகளை நாம் செய்கிறோம், இதனால் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் பருமன் உண்டாகிறது. இந்த தவறுகள் ஆரோக்கியத்திற்கும் நிறைய தீங்கு விளைவிக்கும். இரவில் தாமதமாக உணவு உண்ணுதல், மனஅழுத்தம் மிகுதியாக இருத்தல் சரியாக தூங்காமல் இருத்தல் போன்றவை உடல் எடை அதிகரிக்க காரணமாகும். பெரும்பாலும் தவறான உணவுப்பழக்கம் எடை அதிகரிப்புக்குக் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உணவைத் தவிர எடையைப் பாதிக்கும் பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது எடை அதிகரிப்பதற்கும் குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர்வதற்கும் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை எப்படி அதிகரிக்கும் என்பதை நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவலை உணவியல் நிபுணர் மன்பிரீத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS காரணமாக முகத்தில் அதிகம் முடி வளர்கிறதா.. இவைதான் காரணம்
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். மேலும், பல நோய்களுக்கும் வழிவகுக்கும். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது உடல் பருமனை உண்டாக்கும். குறிப்பாக இது வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேருவதற்கு வழிவகுக்கிறது.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதோ அல்லது அதில் உணவுப் பொருட்களை வைத்திருப்பதோ உங்கள் எடையில் எதிர்மறையான விளைவை உண்டாக்கும். தொப்பையை அதிகரிப்பதோடு, தேவையற்ற முக முடிகள், முகப்பரு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளுக்கும் இது வழிவகுக்கும். இவை அனைத்திற்கும் காரணம், உடலில் உள்ள புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு தான் காரணம். பிளாஸ்டிக்கில் BPA உள்ளதால் நாளமில்லா அமைப்பில் தொந்தரவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கலாம். இதனால் இன்சுலின் அளவும் பாதிக்கப்படலாம். இது இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இதனால் வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரும்.
இந்த பதிவும் உதவலாம்: கடினமான தொப்பையை வேகமாக குறைக்க உதவும் மஞ்சள் தண்ணீர்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]