கர்ப்ப காலத்தில் எப்போது வயிறு பெரிதாகி குழந்தைகளைக் கையில் ஏந்துவோம் என்று நினைக்கும் பெண்களாக அனைவரும் இருந்திருப்போம். நிச்சயம் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடல் அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படும். சில பெண்கள் அந்த உடல் அமைப்பை ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்கள் கர்ப்பத்திற்குப் பிறகு வயிற்றுத் தொப்பை எப்படி குறைக்க வேண்டும்? தளர்ந்துள்ள வயிற்றை எப்படி இறுக்கமாக மாற்ற வேண்டும்? என்பது குறித்த தேடலில் நிச்சயம் இருப்பீர்கள். இதோ இயற்கையான வயிற்றுத் தொப்பையைக் குறைப்பது என இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: கோடைக்காலத்தில் பாதுகாப்புடன் உடற்பயிற்சி செய்வதற்கான வழிகள்!
கர்ப்ப காலத்திற்குப் பிறகு பெண்களின் உடல் அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக உடல் பருமன், வயிற்றில் தொப்பை போன்ற மாற்றங்களை பெண்கள் சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகள் எல்லாம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் கருப்பைச் சுருக்கம் காரணமாக இயல்பு நிலைக்குத் திருப்பிவிடும். ஆனால் இந்த செயல்முறை பெண்களின் உடல் அமைப்பைப் பொறுத்து அமையும் என்பதால் சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் வயிறு இறுக்கமாக வேண்டும் என்றால் பழங்கள், காய்கறிகள், புரதம், கொழுப்பு நிறைந்த உணவுகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை தளர்வான சருமத்தை இறுக்கமாகவும், நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே பெண்கள் கட்டாயம் அவர்களது உணவு முறையில் ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தினமும் சாப்பிட முயற்சி செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்திற்குப் பிறகு வயிற்றுத் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் தொய்வான சருமத்தை இறுக்கமாக்க முடியும். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை, உடற்பயிற்சிகளை முறையாக மேற்கொண்டாலே போதும். கர்ப்பத்திற்குப் பிறகு எவ்வித உடற்பயிற்சி செய்ய முடியுமோ? அவற்றை செய்யவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தசைகளை வலுப்படுத்துகிறது.
பெண்கள் ஆழ்ந்த மூச்சு பயிற்சி மற்றும் தியானத்தை மேற்கொள்ள வேண்டும். சுவாச பயிற்சிகள் மேற்கொள்ளும் போது வயிற்றுப்பகுதி சுருங்கி விரிவடையும் போது தளர்வான தோலை இறுக்கமாக்குகிறது. குழந்தைகளின் விளையாடுவது மற்றும் தோட்டங்களில் பணியாற்றுவது போன்ற வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கவும்.
மசாஜ் செய்தல்:
வயிற்றுப் பகுதியில் தளர்வாக உள்ள தொப்பையை இறுக்கமாக்கவும், குறைய செய்வதற்கும் அடி வயிற்றில் மசாஜ் செய்ய வேண்டும். இத்தகைய நடைமுறை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வயிற்றுப்பகுதியை இறுக்கமாக்குகிறது.
மேலும் படிக்க: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கானக் காரணங்கள்!
குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் மற்றும் தளர்வான வயிற்றை சரிசெய்ய வேண்டும். இதெல்லாம் வயிற்றுத் தளர்வை குறைப்பதற்கு ஒருவழியாக அமைகிறது. இருந்தப்போதும் கருத்தரிப்பதற்கு முன் வயிற்றின் அளவு, எடை அதிகரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை வைத்துத் தான் வயிற்றில் உள்ள தொப்பைக் குறையும். தளர்வாக அமைப்பு குறைந்து வயிற்று இறுக்கமாக மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
image source - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]