herzindagi
peroids impact immunity for women

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கானக் காரணங்கள்!

<p style="text-align: justify;">நல்ல தூக்கமும் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், 8 மணி நேரமாவது தூக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும்.
Editorial
Updated:- 2024-03-20, 16:12 IST

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, மலச்சிக்கல், முதுகு மற்றும் கால்களில் வலி, தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதே சமயம் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அல்லது மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு சளி மறறும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் எனவும் இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஒரு காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

 normal period

மேலும் படிக்க: ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

நோய் எதிர்ப்பு சக்தி குறையக்காரணம்?

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிப்பதோடு, அதை செயல்பாடுகளைப் பலவீனமடைய செய்கிறது. குறிப்பாக ப்ரோஜெஸ்ட்டிரேன் போன்ற பாலியல் ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சி காலம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கலாம் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் மருத்துமவனை சார்பில் வெளியான ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். மேலும் புரோஜெஸ்ட்டிரோன் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உடலின் செயல்திறன் குறைவதாலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பானது உடலில் உள்ள  செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளின் சிக்கலான வலையமைப்பாக இருப்பதோடு நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும் பாக்டீரியா, வைரஸ்கள், மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு நீக்கும் பணிகளை நோய் எதிர்ப்பு மண்டலம் மேற்கொள்ளும். இந்நிலையில் தான் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பெண்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டியது:

  • ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். எனவே இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால், பெண்கள் கட்டாயம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையோடு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பதற்கு ஏதுவாக அதிளவு தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துள்ள பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழச்சாறுகளைப் பருக வேண்டும்.
  • மாதவிடாய் காலம் மட்டுமல்ல, அனைத்து காலங்களிலும் உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • நல்ல தூக்கமும் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், 8 மணி நேரமாவது தூக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும்.
  • தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தைப் பேணிகாக்க வேண்டும். 

 மேலும் படிக்க: மாதவிடாய் வயிற்று வலியை குணப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க!

menstrual cycle

இதுபோன்ற செயல்பாடுகள் உடல் பலவீனமகாமல் பாதுகாப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எனவே பெண்கள் தவறாமல் இந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

Image source - Google 

 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]