நம்மில் பலருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நம் உணவு முறையும், பழக்க வழக்கங்களும் சரியாக இல்லாத நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் ஈடுபட முடியாது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் உட்கொள்ளும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முதலில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு பழக வேண்டும். ஆரோக்கியமான வாழ்வு பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நீங்கள் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். அதேபோல தாகம் எடுக்கும் போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தவரை குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள் உங்களுக்கு பசிக்கும்போது பயமில்லாமல் உங்களுக்கு பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும்போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது எளிதாக செரிமானம் ஆகிவிடும். குறிப்பாக உணவை நிதானமாக மென்று சாப்பிட வேண்டும். தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு ஆனால் இது தவறு.
மேலும் படிக்க: சோம்பலிருந்து நீங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருப்பதற்கான டிப்ஸ்!
முடிந்த வரை தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு பழகுங்கள். ஸ்பூன் பயன்படுத்துவதற்கு பதிலாக உங்கள் கை விரல்களால் சாப்பிட வேண்டும். உங்கள் உணவு செரிமானத்திற்கும் கை விரல்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.
காய்கறிகள் பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு எந்தவித உடற்பயிற்சியும் தேவையில்லை. இவர்கள் எடை கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்.
ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது தனிமையில் அமர்ந்து அமைதியாக உங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தியுங்கள். இது உங்கள் ஆற்றலை அதிகரிக்க பெரிதும் உதவும். தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை படியுங்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் நேரம் செலவளியுங்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்து பழக்கப்படுத்தாதீர்கள். அதேபோல தேவையற்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காமல் இருக்கலாம்.
ஒரு நபருக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் தூக்கம் மிக அவசியம். இரவு 10 மணிக்கு முன் தூங்க முயற்சி செய்யுங்கள். அதேபோல காலை ஐந்து மணிக்கு மேல் அதிக நேரம் தூங்காதிர்கள். காலையில் எழுந்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்று பாருங்கள். இது உங்கள் நாளை நல்ல எண்ணங்களுடன் துவங்க உதவும்.
தினமும் குறைந்தது 20 நிமிடமாவது உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஒருபோதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். ஏனென்றால் அவர்கள் பயணிக்கும் பாதை வேறு, உங்கள் பாதை வேறு. அதேப் போல அடுத்தவரை பார்த்து பொறாமை கொள்வது வேண்டாம். உங்களுக்கு தேவையான விஷயங்கள் உங்களிடம் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களைப் பற்றி புறம் பேசி உங்கள் சக்தியையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள். அதேப் போல உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]