காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது உடலுக்கு ஆற்றலை அளிக்கும் என்பார்கள். ஆனால் நம்மில் பலரிடம் அதிகாலையில் எழக்கூடிய பழக்கங்கள் இல்லை. இதை பின்பற்ற தவறும் பட்சத்தில் நாள் முழுவதும் சோம்பல், எதிர்மறையான எண்ணங்கள் வரக்கூடும். எனவே அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை உங்களால் சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை என்றால், இதோ அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பெற உதவும் சில எளிய குறிப்புகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
![wake up earlier]()
மேலும் படிக்க : நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகளா?
அதிகாலையில் சீக்கிரம் எழுவதற்கான டிப்ஸ்கள்:
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு சீக்கிரம் தூங்கினால் மட்டுமே காலையில் விரைவாக எழுந்திருக்க முடியும். 9 மணிக்குள் தூங்க வேண்டும். 9 மணி நேரம் தூக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் சீக்கிரம் எழுந்திருப்பது பெரும் சிரமத்தைச் சந்திக்க நேரிடும்.
- நாம் தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக, ஸமார்ட்போன்கள் மற்றும் கணினி பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதிலிருந்து வரக்கூடிய ஒளி உடலின் இயற்கையான மெலடோனின் அளவை மாற்றிவிடும். இதனால் தூங்குவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால் இதைக் கட்டாயம் பாலோ பண்ண வேண்டும்.
- இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்வபாக அதிகளவு சர்க்கரை அல்லது காஃபின் உட்கொள்ளும் போது தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுவீர்கள். உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும் என்றால், இரவு தூங்குவதற்கு முன்னதாக அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- உங்களது மொபைல் போனின் ரிங்க் மற்றும் மொசைஜ் வந்தால் வரக்கூடிய சந்தங்களை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால் ஏதாவது அழைப்புகள் வந்து உங்களது தூக்கத்தைக் கெடுத்துவிடும். இதனால் அதிகாலையில் எழுவதற்கு மிகவும் சிரமப்படுவீர்கள்.
- அலுவலகம் அல்லது வீட்டு வேலைகளை இரவு நேரத்தில் கட்டாயம் முடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறான செயல். இவ்வாறு நீங்கள் செய்யும் போது காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. இதோடு காலையில் சோர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், தூக்கமின்மை உடலின் அன்றாட செயல்பாடுகளைக் கெடுத்துவிடும்.
- படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்களது ஜன்னல் பகுதியில் உள்ள ஸ்கிரீன் துணிகளைத் திறந்து வைக்கவும். இதை நீங்கள் பின்பற்றும் போது அதிகாலையில் சூரிய ஒளி உங்களை சீக்கிரம் எழுந்திருக்க செய்யும்.
- அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருப்பதற்கு அலாரம் வைத்திருந்தால் உங்களுக்கு அருகில் வைக்காதீர்கள். கொஞ்சம் தொலைவில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது அலாரக் கடிகாரத்தை அணைப்பதற்காக எழுந்திருப்போம். இந்த செயல்கள் நம்மை தூங்க விடாமல் செய்யும்.
மேலும் படிக்க: பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறீர்களா? பக்க விளைவுகளை பாருங்கள்!
எனவே இதுப்போன்ற வழிமுறைப் பின்பற்றி இனி அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருந்த முயற்சி செய்யுங்கள். உரிய நேரத்தில் பணியை முடிக்கவும், நாள் முழுவதும் உங்களை மிகவும் சுறுசுறுப்பாகவும் பாசிட்டிவ் எனர்ஜியையும் கொடுக்கும்.