herzindagi
image

உணவு பழக்கத்தில் இந்த சிறிய மாற்றத்தை செய்தால் உடல் எடை வேகுவாக குறையும்

இப்போதெல்லாம் பெண்களுக்கு எடை அதிகரிப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது, எனவே எடையைக் குறைக்க நாம் உணவு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டுமா? அல்லது சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமா? இவை எதுவும் தேவையில்லை. உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டால் எடையை குறைக்கலாம்.
Editorial
Updated:- 2025-07-08, 18:40 IST

எடை அதிகரிப்பது இன்றைய பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை, எனவே எடையைக் குறைக்க உணவு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டுமா? அல்லது உணவு சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமா? இல்லை, அது அப்படி இல்லை. உணவு சாப்பிடுவது எடையை அதிகரிக்காது என்பதால் நீங்கள் இதைச் செய்யவே தேவையில்லை, ஆனால் உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களே உங்கள் எடையைப் பாதிக்கின்றன. 

நீங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்கள் செய்யலாம். உதரணமாக இரவு உணவு 7 மணிக்கு முன் சாப்பிட வேண்டும், ஏனெனில் நீங்கள் தூங்குவதற்கு முன் உணவை ஜீரணிக்க வேண்டும். உணவை ஜீரணிக்க குறைந்தது 2-3 மணிநேரம் ஆகும். உணவு சாப்பிட்ட உடனே தூங்குவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற பல விஷயங்கள் காரணமாக எடை அதிகரிக்கிறது. நீங்கள் வழக்கமாக சாப்பிடும் அளவுக்கு உணவை உண்ணுங்கள், ஆனால் நீங்கள் அதை உண்ணும் முறையை மாற்றுங்கள். உணவுப் பழக்கத்தில் ஒரு சிறிய மாற்றம் உங்களை மேலும் ஆரோக்கியமாக்கும்.

 

மேலும் படிக்க:  வயிற்றில் புண்கள் இருந்தால் இந்த ஆயுர்வேத வைத்தியங்களை முறையாக செய்தால் உடனடியாக குணமாகும்

 

எடையை குறைக்க பழம் சாப்பிடுவது அவசியமில்லை

 

பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படியல்ல, அதிக பழங்கள் என்றால் அதிக சர்க்கரை, எனவே ஒரே நேரத்தில் நிறைய பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல, குறிப்பாக நீங்கள் பழச்சாறு குடிக்கவே கூடாது, நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பழம் சாப்பிட்டால் நல்லது. பழங்களில் அத்தியாவசிய நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன, ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. நீங்கள் சாறு குடிக்க விரும்பினால், பழங்களுக்கு பதிலாக காய்கறி சாறு குடிக்க வேண்டும், அது உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

fruits

 

நீர் சத்து காய்கறிகளை சாப்பிடவும்

 

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும், ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கையில் தண்ணீர் குடிக்க மறக்கிறோம். அதற்கு பதிலாக கஷாயக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. மேலும் துளசி, புதினா, எலுமிச்சை கலந்த தண்ணீர் குடிக்கலாம். இது ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. நீர் சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்க்கலாம்.

பசியுடன் இருக்கும்போது சாப்பிடுங்கள்

 

சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவது அவசியம், ஆனால் பசிக்காமல் சாப்பிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றால் சாப்பிடலாம். இல்லை, பசிக்கும் போது மட்டுமே உணவு சாப்பிட வேண்டும், இல்லையெனில் குறைவான உணவை சாப்பிடுவீர்கள், அதாவது குறைவான ஊட்டச்சத்து கிடைக்கும், சிறிது நேரம் கழித்து பசிக்கும் போது, ஆரோக்கியமான சிற்றுண்டி சாப்பிட்டால். நீங்கள் பசிக்கும் போது சாப்பிட வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

30 year girl eat

 

மதிய உணவில் பருப்பு மற்றும் சிக்கன் இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டாம். அதற்கு பதிலாக சிக்கன் மட்டுமே சாப்பிடுங்கள், இல்லையெனில் அதிக புரதமும் தீங்கு விளைவிக்கும். மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும், அதனுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும். காய்கறிகளில் நமக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் புரதம் சத்து கொடுக்கிறது, எனவே நாள் முழுவதும் முடிந்தவரை காய்கறிகளை சாப்பிடுங்கள்.

 

பால் பொருட்களை சாப்பிட வேண்டாம்

 

பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும், அதிலிருந்து பெரும் கால்சியத்தை ஜீரணிக்கத் தேவையான வலிமையை உடலில் இருந்து எடுக்க வேண்டி இருக்கும். பகலில் குடிக்கும் தேநீர் மற்றும் காபியை பால் இல்லாமல் குடிக்க வேண்டும். தேநீர் அல்லது காபியில் பால் கலந்தால், அது அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. அதேபோல் நீங்கள் சர்க்கரையை சாப்பிடவே கூடாது. உங்கள் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான அனைத்து சர்க்கரையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் ரொட்டிகளில் இருந்து கிடைக்கிறது.

 

மேலும் படிக்க: எந்த வயதிலிருந்து பெண்கள் பிரா அணிய தொடங்கினால் சரியாக இருக்கும்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]