நமக்கு எளிதில் கிடைக்க கூடிய, சத்துக்கள் நிறைந்த பச்சை பீன்ஸில் தேவையான அளவுக்கு வைட்டமின் C, A மற்றும் B6 ஆகிய அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளது. இதில் ஃபோலிக் அமிலமும் காணப்படுகிறது. இதை தவிர, பச்சை பீன்ஸில் தேவையான அளவு கால்சியம், இரும்பு சத்து, மாங்கனீஸ், பீடா கரோட்டின், புரதச்சத்து, பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்து ஆகியவை உள்ளது. இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. ஷாலிமாரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் சிம்ரன் சாய்னி இதை பற்றி கூறுகிறார். பச்சை பீன்ஸ்யின் நற்பலன்கள் பற்றியும் அது நம் உடலுக்கு எந்த வகையில் ஆரோக்கியத்தை தருகிறது என்று பார்க்கலாம்
உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி கூறுவது 'பீன்ஸில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் க்ளோரோஃபில்கள் இருக்கின்றன. இதை தவிர, இதில் புரதச்சத்து மற்றும் சிலிகான் போன்ற நுண்ணூட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் உங்கள் உடல் எடையை குறைப்பது முதல் உடல் எலும்புகளை பலமாக்குவது வரையிலான செயல்களை செய்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி கூற்றின்படி பச்சை பீன்ஸில் தேவையான அளவுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தான் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது நம் உடலில் செல்கள் பழுதடைதலை சரி செய்து புதிய செல்களை உருவாக்குகிறது. பலமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் போது சாதாரண நோய்கள் உடலுக்கு வராமல் எதிர்க்கிறது.
எலும்புகளை பலமாக்கும்
உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி, பீன்ஸில் அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. இது நம் உடல் எலும்புகளை பலப்படுத்துகிறது. இதை தவிர, இதில் இருக்கும் வைட்டமின் A, K மற்றும் சிலிக்கான் சத்துக்கள் ஆகியவையும் உள்ளன. இவை அனைத்தும் எலும்புகளுக்கு நன்மை செய்து பலமாக்குகிறது. இந்த சத்துக்கள் குறையும் போது எலும்புகள் பலவீனம் அடையும். எனவே உங்கள் உடல் எலும்புகளை பலமாக்க வேண்டும் என்றால் பீன்ஸ் காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் வயிற்றில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்து கொள்ளும்
தொடர்ந்து பீன்ஸ் சாப்பிட்டால் நம் வயிறும் நலமாக எந்த பிரச்சினையும் அண்டாமல் இருக்கும். வாய்வு கோளாறு, மலச்சிக்கல் மற்றும் வலிகள் உருவாகாது. பீன்ஸில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் செரிமான மண்டலம் துரிதமாக சிறப்பான முறையில் இயங்கும். உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி கூறுவது, 'உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், தினமும் உணவில் பீன்ஸ் சேர்க்க மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் போய் விடும்'
கண் பார்வை நலத்தை மேம்படுத்தும்
பச்சை பீன்ஸ்யில் கரோட்டினாயிட்ஸ் எனும் வேதி பொருள் உள்ளது. இது கண்களின் உட்பகுதியில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கிறது. இவற்றை தவிர, இதில் பல விதமான சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் நம் கண்பார்வையை மேம்படுத்தும். எனவே நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் கண்கள் நன்றாக செயல் பட வேண்டும் என்றால் பச்சை பீன்ஸ்யை உணவில் சேர்க்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
மேற்கூறிய அனைத்தும் சிறப்பான பயன்கள் தான். ஆனால் இப்போது கூறப்போகும் நற்பலன் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயம் உங்கள் வீட்டில் தினமும் பச்சை பீன்ஸ்க்காயை உணவில் சேர்த்து கொள்ளாமல் விட மாட்டீர்கள். உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி கூறுகையில், உங்கள் உடல் எடை குறைக்கும் அத்தனை முயற்சிகளும் பயனற்று போய் விட்டால், கவலைப்பட வேண்டாம். உங்கள் உணவில் இன்றிலிருந்து பச்சை பீன்ஸ் காயை சேர்க்க வேண்டும். இதை உணவில் சேர்த்துக் கொள்ள, வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்கும். எனவே குறைந்த உணவை உண்பீர்கள். எனவே உடல் எடை குறையும்.
இதுவும் உதவலாம் :பாகற்காய் விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation