Bottle Gourd Juice Benefits : வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சுரைக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் தொடர்ந்து 90 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இதன் நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்…

empty stomach bottle gourd juice benefit

பச்சை காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. அதிலும் நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை பிழிந்து ஜூஸாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்து வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்களை உங்களால் உணர முடியும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது வரை இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனுடன் இளநரை மற்றும் சுருக்கங்களை போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க சுரைக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் 90 நாட்கள் வரை குடிக்கலாம். சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவும்

சுரைக்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைந்த அளவிலேயே உள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரத்திற்கு கொடுக்கும். இது பசி ஆர்வத்தை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் A, C, B, K, இரும்புச்சத்து, பொட்டாசியம், மங்கனீசு போன்ற ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன.

bottle gourd juice health benefits

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை நீக்கும்

சுரைக்காயில் அதிகமாக காணப்படும் கோலின் உயிர்ச்சத்து மூளையின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதன் மூலம் மனநல பிரச்சனைகளை தடுக்கலாம்.

வயிற்றுப் பிரச்சனையை சரி செய்யும்

சுரைக்காய் ஜூஸ் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவுகிறது. இதில் உள்ள 98% நீர் மற்றும் நார்ச்சத்து செரிமான பாதையை சுத்தப்படுத்தி, குடல் இயக்கத்தை எளிமையாக்குகிறது.

சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம்

சுரைக்காய் ஜூஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி அழகு சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் இயற்கை டீடாக்ஸ் பானமாக அமைகிறது.

வழுக்கை மற்றும் இளநரையை தடுக்க சுரைக்காய் ஜூஸை உச்சந்தலையில் தடவலாம்.

சுரைக்காய் ஜூஸ் செய்வது எப்படி?

surakkai juice benefits

தேவையான பொருட்கள்

  • சுரைக்காய் - 2 கப் (தோலுரித்து, விதை நீக்கி, நறுக்கியது)
  • சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  • புதினா இலைகள் 15-20
  • எலுமிச்சை சாறு 2- 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • இஞ்சி - சிறிய துண்டு

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க ஆயுர்வேத குறிப்புகள்

செய்முறை

  • முதலில் மிக்ஸியில் சுரைக்காய், இஞ்சி, புதினா இலைகள் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு 1 கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக அரைக்கவும்.
  • இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
  • காலையில் எழுந்தவுடன் இதை குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP