lemon water benefits : எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடை குறைப்பு முதல் வயதாவதை தாமதப்படுத்துவது வரை, சூடான எலுமிச்சை நீரை வெவ்வேறு வகைகளில் பயன் படுத்தலாம்.

 
lemon water benefits

உங்களுடைய உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? மூட்டு வலி, சளி, முகச்சுருக்கம் மற்றும் வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? இவை அனைத்தும் நீங்க வேண்டும் என்றால் இந்த இரண்டு எளிமையான பொருட்களை தினமும் பயன்படுத்தி பலன்களை பெறலாம்.

சிட்ரிக் அமிலம் எலுமிச்சையில் அதிகம் உள்ளது. எலுமிச்சைக்கு நம் உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றம் செய்யும் சக்தி இருக்கிறது. வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் காலை வெறும் வயிற்றில் குடிப்பது, சிறந்த காலை பானமாக அமைகிறது. உடல் நலத்தை பொறுத்தவரை, எலுமிச்சை நீர் குடித்தால், நம் குடல் சரியான முறையில் செயல்படும். இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

எலுமிச்சை தன் மருத்துவ குணங்களுக்காகவே அனைவராலும் விரும்பப்படுவது. ஒரு கப் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரின் பயன்களின் பட்டியல் இதோ

  • நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைக்கும், பல்வேறு தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
  • இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும்
  • எலுமிச்சையில் காயங்களை குணப்படுத்தும் தன்மையும் உள்ளது
  • இதில் அதிக பொட்டாசியம் சத்து இருப்பதால் எலுமிச்சை இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு பல நன்மைகள் தரும்
  • இதில் பெக்டின் நார்ச்சத்து உள்ளது. இது கோலான் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது . நம் உடலில் ph அளவை அளவோடு வைத்திருக்கும்
  • தினமும் ஒரு கப் வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.
  • தொடர்ந்து இந்த பானம் குடித்து வந்தால், ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கம் கட்டுப்படுத்தபடும்.
  • யூரிக் அமிலம் எலுமிச்சை நீரில் கரைந்து விடும் என்பதால் வலி மற்றும் வீக்கம் குறைந்து விடும்.
  • உங்களுக்கு சளித் தொல்லை இருக்கிறதா? எலுமிச்சை தண்ணீர் மூலம் குணப்படுத்தி விடலாம்.
  • எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை மற்றும் நரம்பு செல்களை ஊக்குவிக்கிறது.
  • உங்களுடைய கல்லீரலின் கால்சியம் மற்றும் ஆக்சிஜன் அளவை சீராக வைக்க இந்த எலுமிச்சை தண்ணீர் உதவுகிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் இல்லாமல் போகிறது.
  • உங்கள் முக சுருக்கத்தை மற்றும் பருக்களை குணப்படுத்துகிறது.
  • கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது. கண் பிரச்சனைகளை எதிர்த்து போராடுகிறது.
  • கடுமையான வேலைகளில் போது உடல் வழியாக வெளியேறும் உப்பு நீர், எலுமிச்சை தண்ணீர் குடிக்கும் போது மறுபடியும் உடலில் வந்து சேரும்.
lemon water cures diseases

எலுமிச்சை அனைத்து சத்துக்களும் நிறைய பெற்றது. உங்கள் நாளை தொடங்கும் போது காலையில் இந்த நீரை ஒரு கப் குடித்து விட்டு தொடங்க உங்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும். எளிமையாக கிடைக்க கூடிய இந்த எலுமிச்சை பழம் நம் உடலை சுத்தம் செய்யும் மற்றும் வியாதிகள் ஏற்படாமல் பாதுகாக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP