bitter gourd seeds benefits : பாகற்காய் விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்

பாகற்காயில் மட்டுமல்ல, அதன் விதைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன, அவற்றின் அளவற்ற பயன்கள் பற்றி பார்க்கலாம்.

 
bitter gourd seeds remedies in tamil

பாகற்காயை உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்து கொள்ளலாம். சிலர் பாகற்காயை உணவில் காய்கறியாக சமைத்து சாப்பிடுவார்கள், சிலர் பாகற்காயை சாறு செய்து குடிப்பார்கள், சிலர் கூட்டு செய்து சாப்பிடுவார்கள், சிலர் பாகற்காய் வற்றல் செய்வார்கள். இவ்வாறு பல விதமாக பாகற்காயை உட்கொள்ளலாம்.

உங்களை உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் ஏற்படாமல் நல்ல திடத்துடன் வைத்து கொள்ளும், பல்வேறு நன்மைகள் நிறைந்த பாகற்காய் பற்றி நாம் இங்கு பார்க்க போகிறோம். வைட்டமின் A, வைட்டமின் C, ஜிங்க், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இரும்பு சத்து ஆகியவை பாகற்காயில் உள்ளன. ஆனால் மிக சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்னவென்றால், பாகற்காயை போல் அதன் விதைகளுக்கும் பலன் அதிகம் உள்ளது.

எப்போதெல்லாம் பாகற்காய் சமைக்கிறார்களோ, அப்போதெல்லாம் அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் இந்த விதைகளையும் உங்கள் உணவில் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்து கொள்ளலாம். ஒரு சிலர் பாகற்காய் விதைகளை மிக சிறந்த முறையில் வெவ்வேறு விதமாக தயாரிக்கின்றனர். ஃபேட் டு ஸ்லிம் குழுவின் உணவியல் நிபுணர் ஷிகா ஏ ஷர்மா பாகற்காய் விதை பற்றிய பல்வேறு நன்மைகள் பற்றி நம்முடன் பகிர்கிறார். அதை பற்றி இங்கு காண்போம்.

bitter gourd benefits

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது

பாகற்காயுடன் சேர்ந்து அதன் விதைகளுக்கும் செரிமானத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து இருக்கிறது. ஒரு விதத்தில் வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்கம் செய்யும் ஊக்கியாக செயல்படுகிறது. உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உணவில் பாகற்காய் விதைகளை நிச்சயமாக சேர்த்து கொள்ள வேண்டும். இதை தவிர, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. பாகற்காயில் இன்சுலின் தன்மை இருப்பதால் இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதை தடுக்கிறது.

வயிற்றில் பூச்சி இருந்தால் சாப்பிடலாம்

குழந்தைகள் மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் பூச்சி பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை ஏற்படும் போது, இது தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் தொடங்கி விடும். பசியின்மை, எரிச்சல், சோர்வு போன்ற பிரச்சனைகள் உருவாகும். இது போன்ற சமயத்தில், இதன் விதைகளை அரைத்து சாப்பிட நிவாரணம் கிடைக்கும். நீங்கள் விரும்பினால், இதை அரைத்து பொடியாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதே போல, இதை வருத்த பிறகு விதைகளை நேரடியாக அப்படியே உட்கொள்ளலாம். வயிற்றில் உள்ள பூச்சிகளை ஒழிக்க இது ஒரு சிறந்த வழியாகும்

அதிகப்படியான கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

வயது ஏற ஏற, சர்க்கரை அளவு மட்டும் அல்ல, கொலஸ்ட்ரால் அளவும் ஏற தொடங்கி விடும். பாகற்காய் விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இது போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது இதயத்திற்கு அபாயம் விளைவிக்கும் சூழலும் ஏற்படும். இதனால் மட்டும் அல்ல, கெட்ட கொலஸ்ட்ரால் தொடர்ந்து ஏற ஏற, நெஞ்சு வலி, மாரடைப்பு, சர்க்கரை வியாதி ஆகியவை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த, பாகற்காயின் விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது இதயத்தை திடமாக வைக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பாகற்காய் போல அதன் விதைகளிலும் பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த சத்துகள் தான் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. தினமும் பாகற்காய் விதைகளை பொடியாக்கி உண்ணலாம். இதற்கு பாகற்காய் விதைகளை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை வெந்நீருடன் ஒரு தேக்கரண்டி கலந்து தினமும் சாப்பிடலாம்.

இதுவும் உதவலாம் : சர்க்கரை நோய் மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளை விரட்டும் வெண்டைக்காய்

bitter gourd seeds

உடல் எடையை குறைக்க உதவுகிறது

நீங்கள் பாகற்காயை உணவில் சமைத்து சாப்பிடும் போது, அதன் விதைகளையும் கட்டாயமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் விதைகளில் நார்ச்சத்து அதிகம்இதுவும் உதவலாம் உள்ளது. இதை தவிர, நாம் உண்ணும் உணவில் உள்ள வேண்டாத கழிவுகளை வெளியேற்ற இது மிகவும் உதவுகிறது. இதனால் எப்போதும் நீங்கள் பாகற்காய் சமைக்கும் போது அதன் விதைகளை தூக்கி எறிந்து விட வேண்டாம். பாகற்காயின் விதைகளை சட்னியாகவோ, வற்றலாகவோ இன்னும் வேறு ஏதாவது வழிகளிலோ இதை சாப்பிட நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP