Spinach Benefits: ஆரோக்கியமான வாழ்விற்குத் தினமும் இந்த கீரைகளில் ஒன்றையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் கீரை உணவுகள் அவசியம். தினமும் ஒரு வகையான கீரையாவது உணவில் சேர்த்துக்கொண்டால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்

Benefits of spinach for weight loss

கீரைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்தியாவில் பல வகையான கீரைகள் உணவில் சேர்க்கப்படுகிறது. கீரையில் இரும்பு சத்து மற்றும் பல வகையான தாதுப்பொருட்கள் உள்ளது. தினமும் கீரை வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் இரத்த சோகையை தடுக்கலாம். கீரையில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இந்த கட்டுரையில் கீரை வகைகளும் அதன் பலன்களை பார்க்கலாம். சந்தையில் விற்கப்படும் பல வகையான கீரைகளின் சத்துகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரை inside

மணத்தக்காளி கீரை வாய் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு நல்லது. உடல் சூட்டை தனிக்கக்கூடியது. சருமத்தின் ஆரோக்கியத்திற்கு இந்த கீரை சிறந்த தேர்வாக இருக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாக மாறும். இந்த கீரையில் பொரியல், கூட்டு, மண்டி போன்று சமைத்து சாப்பிடலாம்.

பசலைக்கீரை

பருப்பு மசியல், சப்பாத்தி, பன்னீர், புலாவ் போன்று இந்த கீரையில் சமைத்து சாப்பிடலாம். இந்த கீரை இரத்த செல்களின் அளவை அதிகப்படுத்த உதவுகிறது. இந்த கீரையை குழந்தைகளுக்குச் சப்பாத்தியுடன் கலந்து கொடுக்கலாம். பசலைக்கீரையில் விட்டமின் சி, ஏ, கே மற்றும் ஈ அதிகம் அளவு உள்ளது, இது நோய் எதிர்ப்பு கத்தியை அதிகரிக்கிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை சரி செய்கிறது. செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரை இரண்டு வகைகள் உண்டு, இரண்டு வகை கீரைகளும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த கீரை சாப்பிட்டால் உடல் தங்கம் போல் ஜொலிக்கும் என முன்னோர்கள் சொல்வார்கள். கண் பார்வைக்கு இந்த கீரை நல்லது. இந்த கீரை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும்.

முருங்கை கீரை

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளை உடலுக்கு தருகிறது. இதில் இரும்புச் சத்து உள்ளதால் ரத்தசோகையை போக்குகிறது. மூட்டுவலிக்குச் சிறந்த கீரையாக இருந்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு இந்த கீரை சிறந்தது.

தண்டு கீரை

thandu keerai

தண்டு கீரையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸினேற்ற பண்புகள் உள்ளது. இதில் உயர் நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. இதில் இருக்கும் நோயெதிர்ப்பு சத்திகள் உடலுக்கு நன்மை பயக்கும்.

முளைக்கீரை

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் அரிப்பு ஏற்பட காரணம் என்ன தெரியுமா?

முளைக்கீரையில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் இருக்கும் மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பருவகால மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல், இரும்பல், மற்றும் சளிக்கு நிவாரணம் அளிக்கிறது. தோலில் ஏற்படும் அரிப்புகளைக் குணப்படுத்த உதவுகிறது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP