Benefits of using neem stick for teeth

Neem Stem Benefits: வேப்பங்குச்சியால் பல் துலக்கினால் பற்கள் சார்ந்த அனைத்தி பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்

பல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்து வருகிறது வேப்பங்குச்சி. வேப்பங்குச்சியால் பல் துலக்கினால் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-07-25, 18:50 IST

நமது முன்னோர்கள் காலத்தில் பற்கள் துலக்குவதற்கு டூத் பிரஷ், பேஸ்ட்கள் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு பதிலாக பல் துலக்குவதற்கு சாம்பல், வேப்பங்குச்சி, ஆலமரக் குச்சி மற்றும் அதிமதுர குச்சிகளைப் பயன்படுத்து வந்தனர். இதனால் அவர்களுக்கு பல் மற்றும் ஈறு பிரச்சனைகள் சந்தித்ததில்லை. இது முற்றிலும்  இயற்கையான பொருட்கள், எந்தவித கெமிக்கலும் இதில் பயன்படுத்தாத காரணத்தால் வாய்க்கு  நல்லது. இந்த காலகட்டத்தில் பற்களை விலக்க டூத் பிரஷ், பேஸ்ட்கள் வந்துவிட்டன, இவை பற்களை சேதப்படுத்துகின்றன மற்றும் வாய் சார்ந்த பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நமது பற்களை மட்டுமின்றி, வாய் சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருக்க எளிதில் கிடைக்கக்கூடிய வேப்பங்குச்சி பயன்படுத்தலாம். அவற்றில் இருக்கும் நன்மைகள் பற்றி முழுமையாக பார்க்கலாம். 

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் அரிப்பு ஏற்பட காரணம் என்ன தெரியுமா?

ஈறுகளை சேதப்படுத்தும் கிருமிகளை கட்டுப்படுத்துகிறது 

neem stem inside

வேப்பங்குச்சியை பற்களில் கடிக்கும் நிலையில் இதிலிருந்து வெளியே வரும் சாறுகள் ஈறுகளை சேதப்படுத்தும் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவு பிரச்சனைகளுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தினமும் வேப்பங்குச்சியில் பற்களை துலக்கி வருவது சிறந்த தீர்வாக இருக்கும். வேப்பங்குச்சி பயன்படுத்தியும் நாளுக்கு நாள் கசிவு அதிகமாக இருந்தால் வேறு பிரச்சனைகள் இருக்கலாம் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

பல் சொத்தைகள் வராது

பல் துலக்கும் போது வேப்பங்குச்சி சாறு பற்களில் படும் நிலையில் பற்களை சேதப்படுத்தி சொத்தைகளை உருவாக்கும் பாக்டீரியாக்களைத் தடுக்கிறது. தினமும் இரண்டு முறை வேப்பங்குச்சியால் வேப்பங்குச்சியால் பல் துலக்கி வந்தால் சொத்தை பற்கள் வராது. சொத்தை பற்கள் இருந்தாலும் சரியாகும் வாய்ப்புகள் அதிகம். 

வாய் துர்நாற்றத்தை தடுக்கும் 

வாய் துர்நாற்றம் வீச காரணம் வாயில் கிருமிகள் அதிகமாக இருப்பதால் வருகிறது. இந்த கிருமிகளை முழுமையாக வெளியேற்றி வாயை புத்துணர்ச்சியுடன், நறுமணத்துடன் வைத்திருக்க வேப்பங்குச்சி உதவுகிறது. தினமும் தூங்குவதற்கு முன் வேப்பங்குச்சியால் பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் சீக்கிரம் விலகிவிடும். வேப்பங்குச்சியில் இருக்கும் சத்தி வாய்ந்த மூல பொருட்கள் பற்களில் வலி ஏற்படுத்துவதைத் தடுக்க உதவுகிறது. 

மஞ்சள் பற்களை நீக்கும்

neem stem teeth inside

மேலும் படிக்க: இரும்புச்சத்து குறைபாட்டை போக்கும் இந்த மேஜிக் பொடியை வீட்டில் எளிதாக செய்யலாம்

சிலருக்குப் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும், தினமும் வேப்பங்குச்சியில் பல் துலக்கி வந்தால் வெள்ளையாக மாறும். அதேபோல் வாய் புண் உள்ளவர்களுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும். பற்களும் வலிமையாக இருக்க உதவுகிறது. வாய் இடுக்கில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்ற உதவுகிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியால் பல் துலக்கி வந்தனர்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]