herzindagi
Garlic Tea Benefits image

Garlic Tea: சளி, இருமல் மற்றும் உடல் எடையை முழுமையாக குணப்படுத்தும் பூண்டு தேநீர்

பூண்டு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
Editorial
Updated:- 2023-09-15, 17:13 IST

சளி, இருமல் மற்றும் பருமன் போன்ற பிரச்சைகளுக்கு நிறைய மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள். இதனால் பலமுறை மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அத்தகைய தீர்வுகள் உங்கள் சமையலறையில் உள்ளது. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் எடை இழப்பு, மற்ற எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். ஆம், பூண்டு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

 

இந்த பதிவும் உதவலாம்:  வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் பூண்டு

சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது

Garlic Tea Benefits cold

வானிலை மாற்றம் காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும். இதனால் மூக்கு மற்றும் தொண்டை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவை உங்கள் அன்றாட வாழ்வில் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்குவது மட்டுமின்றி தொண்டையில் ஏற்படும் தொற்றுநோயையும் அதிகரிக்கும். இதற்குக் காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். இதன் காரணமாக உங்கள் உடல் பருவகால பாக்டீரியாக்களால் எளிதில் பாதிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில் பூண்டு டீ குடித்தால் சளியை பெரிய அளவில் குணப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இந்த பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்கு உதவுகிறது.

எடை இழப்பை துரிதப்படுத்துகிறது

Garlic Tea Benefits weight loss

பூண்டு ஆரோக்கியத்தின் சக்தியாக கருதப்படுகிறது. இதில் அனைத்து வகையான நன்மை பயக்கும் சத்துக்களும் உள்ளன. உங்கள் இரத்த நாளங்களை தளர்த்துவதுடன்,  இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. உணவில் பூண்டு அதிகம் உள்ளவர்களின் உடலில் கொழுப்புச் சேமிப்பு வெகுவாகக் குறைகிறது.  புதிய பூண்டை சாப்பிட்டால் அது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

தோல் நோய்கள் வராமல் காக்கும்

பூண்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சருமம் தொடர்பான பல பிரச்சனைகளையும் நீக்குகிறது. பெரும்பாலும் பல வகையான பாக்டீரியாக்கள் சருமத்தில் நுழைகின்றன, இதன் காரணமாக நீங்கள் அடிக்கடி தோல் தொடர்பான பிரச்சனைகளில் பாதிக்கப்படுகிறீர்கள். ஆரம்பத்தில் இது முகப்பரு வடிவில் தோன்றும் ஆனால் பின்னர் அது கடுமையான வடிவத்தை எடுக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தோல் நோயை எதிர்த்துப் போராட பூண்டு டீயைப் பயன்படுத்தினால். எனவே இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டு தேநீர் உங்கள் முகத்தின் சருமத்தில் ஊடுருவி, அதில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது.

பூண்டு தேநீர் தேவையான பொருட்கள்

  • பூண்டு - ஒரு கைபிடி
  • கருப்பு மிளகு - 1 ஸ்பூன்
  • தேன் - 1 ஸ்பூன் 

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதித்ததும் நறுக்கிய பூண்டுகளை சேர்க்கவும்.
  • பின் ஒரு ஸ்பூன் மிளகு சேர்க்கவும். 
  • பின் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அனைக்கவும்.
  • பின் தேன் கலந்து குடிக்கவும். 

இந்த பதிவும் உதவலாம்:  தினமும் இப்படி பூண்டை சாப்பிடுங்கள்.. அப்புறம் பாருங்கள் அற்புத நிகழ்வுகளை!!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

 Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]