உடலை கட்டுக்கோப்பாக வைப்பது நம் உடல் நலத்திற்கு உதவுவது மட்டுமல்ல, நம் தினசரி வாழ்வில் நாம் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. ஆனால் பல சமயங்களில் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாகவோ அல்லது எந்த உடற்பயிற்சியும் செய்ய நேரம் கிடைக்காத காரணத்தினாலோ, பல்வேறு முயற்சிகள் செய்தும் உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் பெண்களால் வெற்றி பெற முடிவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். உடல் எடை அதிகரிப்பதை நினைத்து நீங்கள் வருத்தமாக இருந்தால், இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு மிக எளிதான வழிமுறையைச் சொல்கிறோம், அதை நீங்கள் எளிதாகப் பின்பற்றலாம். இதில் நீங்கள் எந்தவிதமான கடின உழைப்பும் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஆப்பிளையும் தேனையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது தான் அந்த எளிய வழி. எடை குறைப்புக்கு ஆப்பிள் மற்றும் தேனை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
ஆப்பிளுக்கு ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, An apple a day, keeps a doctor away, அதாவது தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை எனும் அளவுக்கு நன்மைகளை வழங்கும். ஆப்பிளில் பல ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. பல்வேறு நன்மைகள் கொண்ட நார்ச்சத்து ஆப்பிளில் போதுமான அளவில் காணப்படுகிறது.
இதுவும் உதவலாம் :வெண்டைக்காய் ஜூஸின் நன்மைகளை பற்றி கேள்விபட்டதுண்டா?
ஆப்பிளில் சோடியம் அளவு மிகக் குறைவாக உள்ளது. இது உடலில் இருந்து அதிகப்படியான நீரை அகற்ற உதவுகிறது. வைட்டமின்களின் பொக்கிஷமாகக் கருதப்படும் தேன், உடலின் சக்தியை அதிகரிப்பதோடு, கலோரிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒரு சிறிய ஆப்பிளில் பொதுவாக 65 கலோரிகள் உள்ளன மற்றும் கொழுப்போ சுத்தமாக இல்லவே இல்லை, அதே நேரத்தில் நடுத்தர அளவிலான ஆப்பிளில் 110 கலோரிகள் உள்ளன.
ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் எடை குறைவதோடு பல நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக, பற்கள் வெண்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும், மனம் ஆரோக்கியமாக இருக்கும். செரிமான தன்மையை நன்றாக வைத்திருக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. அதில் உள்ள நார்ச்சத்து செரிமான இயக்கத்தை சிறப்பாக செய்ய உதவுகிறது. ஆப்பிளை தொடர்ந்து சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் உண்டாகும் அபாயத்தையும் குறைக்கிறது.
உடல் எடை குறைப்புக்கு தேன் மிகவும் பயனுள்ளது. தேன் இயற்கையாகவே இனிப்பானது. தேனை தொடர்ந்து உட்கொள்வது உடலுக்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், இனிப்பு சாப்பிடும் ஆசையையும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைப்புக்கு தேன் பயன்படுத்துவது மிகவும் பிரசித்தி பெற்றது. பல பெண்கள் உடல் எடையை குறைக்க காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து குடிப்பார்கள், சில பெண்கள் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு கலவைகளும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் ஆப்பிளுடன் தேனை சேர்த்து சாப்பிடலாம்.
இதுவும் உதவலாம் :காலிபிளவரை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முடியுமா?
நீங்கள் விருப்பப்பட்டால், ஆப்பிளை நசுக்கி தேன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஆப்பிள் துண்டுகளை நறுக்கி தேனில் குழைத்து சாப்பிடலாம். இதன் மூலம் தேனின் இயற்கையான இனிப்பும், ஆப்பிளின் நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஆப்பிளையும் தேனையும் ஒன்றாக உட்கொள்வது உங்கள் இனிப்பு சாப்பிடும் ஆசையையும் கட்டுப்படுத்துகிறது மற்றும் நீண்ட நேரத்திற்கு உங்கள் வயிறு நிறைந்து இருப்பதாக உணர வைக்கிறது மற்றும் கலோரி உட்கொள்வதை கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]