Lady's Finger Juice : வெண்டைக்காய் ஜூஸின் நன்மைகளை பற்றி கேள்விபட்டதுண்டா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். ஆனால் வெண்டைக்காயை சாறாக செய்து கூட குடிக்கலாம், சாறாக குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்...

ladys finger juice benefits

வெண்டைக்காய் சாறு தயாரிப்பது மிகவும் எளிதானது, ஆனால் அதன் சாற்றைக் குடிப்பதற்கு முன், ஊட்டச்சத்து நிபுணர் கவிதா தேவ்கனிடம் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம். கவிதா கூறுகையில், 'வெண்டைக்காய் பல சத்துக்களை கொண்டது.நீங்கள் அதிக வெண்டைக்காயை சாப்பிட விரும்பினால், அதனால் விளையும் தீங்கினையும் நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே வெண்டையை குறைந்த அளவு சாப்பிட வேண்டும். அதை அளவோடு உட்கொள்வது தான் உடலுக்கு நல்லது.

வெண்டையில் இருக்கும் சத்துக்கள்

  • வைட்டமின்-C மற்றும் K உள்ளது.
  • வெண்டைக்காய் இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவற்றால் நிரம்பியது
  • வெண்டைக்காய் ஆன்டி பாக்டீரியா தன்மை கொண்டது.
  • பல மருத்துவ குணங்களுடன், வயிற்றுப்போக்கை எதிர்க்கும் குணமும் வெண்டையில் காணப்படுகிறது.
  • வெண்டை நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.

ladys finger

வெண்டை சாறு செய்வது எப்படி?

தேவையான பொருள்

  • வெண்டைக்காய் - 5
  • தண்ணீர் - 1 கப்

செய்முறை

  • வெண்டையை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
  • வெண்டையின் காம்பினை அகற்றி விடவும்.
  • அதன் பிறகு மிக்ஸியில் வெண்டைக்காய் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
  • இதன் பிறகு இந்த சாற்றை வடிகட்டாமல் குடிக்கலாம்.
  • உங்களுக்கு ஒரு வேளை கல் பிரச்சனை இருந்தால் சாற்றை வடிகட்ட வேண்டும்.

வெண்டைக்காய் சாற்றின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்

  • வெண்டைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின்-K மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
  • தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சனை இருந்து கொண்டே இருந்தால், வெண்டைக்காய் சாப்பிட இந்த மலச்சிக்கல் பிரச்சனை குறைந்தே போய் விடும். ஆனால் வெண்டையை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
  • இது ஆன்டி பாக்டீரியா தன்மை கொண்டதால், வெண்டைக்காய் சாப்பிடுவது பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. வைட்டமின்-C யின் முக்கிய உறைவிடமாகவும் உள்ளது, எனவே வெண்டைக்காய் சாப்பிடுவது இருமல் மற்றும் தொண்டை வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
  • வைட்டமின்-K இருப்பதால், வெண்டைக்காய் சாப்பிடுவது உங்கள் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. ஆனால் வெண்டை சாற்றை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குடிக்கவும்.
  • வெண்டை சாறு குடிக்கும் நாட்களில் எல்லாம் வெண்டைக்காயை சாப்பிட வேண்டாம். வெறும் 5 வெண்டையை (சாறு) மட்டுமே உட்கொள்வது போதுமானது.
ladys finger benefits

வெண்டை சாறு குடிக்கும் போது பின்வரும் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

சர்க்கரை நோய் இருந்தால் வெண்டை சாறு குடிக்கலாம், ஆனால் கவிதா அவர்கள் கூறுகையில், 'வெண்டை குளுக்கோஸின் அளவை குறைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தினமும் வெண்டை சாறு சாப்பிட வேண்டாம்.

உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், விதைகள் நிறைந்த உணவை சாப்பிட கூடாது என்று உங்கள் மருத்துவர் கண்டிப்பாக தடை விதித்திருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், சிறுநீரகம், பித்தப்பை அல்லது கருப்பையில் கல் பிரச்சனை உள்ளவர்கள் வெண்டை சாறு குடிக்கலாம், ஆனால் அதில் ஆக்சலேட் என்ற கலவைகள் இருப்பதால், கல் பிரச்சனை அதிகரிக்கும். அதனால்தான் வெண்டை மற்றும் அதன் சாறினை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். உங்களுக்கு அடிக்கடி வாயு பிரச்சனை இருந்தால், வெண்டைக்காய் சாப்பிடுவதை குறைக்க வேண்டும் மற்றும் இரவில் வெண்டைக்காயை சாப்பிடவே கூடாது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP