முட்டையில் நிறைய சத்தான கூறுகள் உள்ளதால் அவை முழு உடலுக்கும் நன்மை பயக்கும். குளிர்காலத்தில் முட்டை சாப்பிடுவது உடலில் வெப்பத்தை தக்க வைக்கிறது. முட்டையில் கலோரிகள் குறைவாகவும், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் 1 அத்திப்பழத்தை இப்படி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை கிட்டவே வராது
முட்டைகளை வேகவைப்பது எளிதான காரியமாகத் தெரிகிறதா?. இருப்பினும் மிகச் சிலருக்கே முட்டைகளை சரியாக வெப்பநிலையில் வேகவைக்கத் தெரிந்துள்ளது. பலர் முட்டைகளை விரைவாக கொதிக்க வைப்பதற்காக அதிக தீயில் வைக்கிறார்கள் ஆனால் அவ்வாறு செய்வது தவறு. அவை அதிக வெப்பநிலையில் சமைக்கப்படக்கூடாது. அதிக வெப்பநிலையில் சமைப்பதன் மூலம் முட்டையில் உள்ள புரதத்தைப் பெறுவீர்கள் ஆனால் பல ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. அதிக வெப்பநிலையில் முட்டைகளை சமைப்பதால் அவற்றில் உள்ள வைட்டமின் ஏ 17% முதல் 20% வரை குறைகிறது என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது. அதிக வெப்பத்தில் முட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களும் குறையும். எனவே, முட்டையை நீண்ட நேரம் அல்லது அதிக தீயில் வைத்து சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: சுரைக்காய் சாற்றின் முழு பலன்களை பெற இப்படி அருந்த வேண்டும்!!
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]