மலச்சிக்கல் பிரச்சனைக்கு தினமும் 1 அத்திப்பழம் சாப்பிட்டால் பிரச்சனையே இருக்கது. 1 அத்திப்பழத்தை தினமும் இரவில் அரை கப் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை சாப்பிட்டு அதன் நீரையும் குடித்து வந்தால் சில நாட்களில் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: சுரைக்காய் சாற்றின் முழு பலன்களை பெற இப்படி அருந்த வேண்டும்!!
வயிறு சரியாக சுத்தம் செய்யப்படாததால் அல்லது உடலில் திரவப் பொருள் இல்லாததால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. மலச்சிக்கலின் இருந்தால் உடலில் புத்துணர்ச்சி இருக்காது. நீண்ட காலமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்து அதற்கு நீங்கள சிகிச்சையளிக்கவில்லை என்றால் அது ஒரு தீவிர நோயின் வடிவத்தை எடுக்கலாம். அதனால்தான் பிரச்சினைக்கு சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியம். மலச்சிக்கல் பிரச்சனைக்கு சந்தை மருந்துகளை வாங்கி சாப்பிட்டால் கூட அதை குணப்படுத்த அதிக நேரம் எடுக்கும். எனவே, மலச்சிக்கல் பிரச்சனையில் அத்திப்பழம் போன்ற வீட்டு வைத்தியங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அத்திப்பழம் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், செல்லுலோஸ், தாது அமிலங்கள் மற்றும் நீர் உள்ளது. இது தவிர இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம், சோடியம், சல்பர், பாஸ்பாரிக் அமிலம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்கலாம்.
அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்தது மற்றும் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படும் பெண்கள் அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் சிகிச்சைக்கு அத்திப்பழம் மற்றும் உலர்ந்த அத்திப்பழம் இரண்டையும் பயன்படுத்தலாம்.
சுஜேதா ஷெட்டி கருத்துப்படி அத்திப்பழம் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி1, பி2, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீசு, சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளதால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கின்றன.
அத்திப்பழம் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். பெண்கள் உடல் எடையை குறைக்க அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து மிகவும் நல்ல ஆதாரமாக இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுவது மட்டுமல்லாமல் பாலுடன் அத்திப்பழத்தை எடுத்துக் கொண்டால் எடையையும் அதிகரிக்கிறது. உங்கள் குழந்தை எடை அதிகரிக்க விரும்பினால் பாலுடன் அத்திப்பழம் கொடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: தூங்கும் முன் இந்த பானங்களை குடித்தால் விறுவிறுவென உடல் எடை குறையும்
அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளை வலிமையாக்கும். இதை சாப்பிடுவதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு கோளாறுகளிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இது பாஸ்பரஸின் வளமான ஆதாரமாகவும் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் அவற்றின் வீழ்ச்சியைத் தடுக்கிறது. மலச்சிக்கலால் கவலைப்படுகிறீர்கள் அல்லது உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த செய்முறையை இன்றே பின்பற்றுங்கள்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]