herzindagi
Bottle gourd juice big

Bottle Gourd Juice: சுரைக்காய் சாற்றின் முழு பலன்களை பெற இப்படி அருந்த வேண்டும்!!

சுரைக்காய் சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆனால் அதை சரியான நேரத்தில், சரியான அளவில் மற்றும் சரியான முறையில் குடிப்பது அவசியம். 
Editorial
Updated:- 2023-08-04, 19:42 IST

சுரைக்காய் சாற்றில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து இதில் அதிகம் காணப்படுகின்றன. இது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இதனுடன், எடை இழப்புக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். 

ஆயுர்வேதத்தின்படி எதிலும் முழு பலனைப் பெற அதை சரியான நேரத்தில் மற்றும் சரியான அளவில் சாப்பிடுவது மிகவும் முக்கியம். எந்த ஒரு நல்ல பொருளையும் தவறான நேரத்தில் அதிக அளவில் சாப்பிட்டால் அது தீங்கு விளைவிக்கும். ஆயுர்வேத நிபுணர் நீத்திகா கோயல் சுரைக்காய் ஜூஸ் எப்படி குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

சுரைக்காய் ஜூஸ் குடிக்க சரியான நேரம்

  • அதிக பலன்களைப் பெற மக்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடிப்பார்கள். ஆனால் எடை குறைவாக இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அப்படி குடித்தால் உடல் எடையை குறையலாம் மற்றும் பலவீனமாகலாம்.

 

  • உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடிக்கலாம். இதனால் உடல் எடை வேகமாக குறையும்.

weight lose juice

  • சிலர் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் சுரைக்காய் ஜூஸ் குடிப்பார்கள் ஆனால் ஆயுர்வேதத்தின் படி அது தவறு. சுரைக்காய் ஜூஸ் குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மாலையில் குளிர்ந்த பொருட்களை உட்கொள்வது ஆயுர்வேதத்தில் தீங்கு விளைவிக்கும்.

 

  • சிலர் சுரைக்காய் ஜூஸ் குடிக்க தினமும் அறிவுறுத்தப்படுகிறார்கள், சிலர் சீசன் மற்றும் உடல் வகையைப் பொறுத்து சுரைக்காய் ஜூஸ் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், உங்கள் உடலுக்கு ஏற்ப சரியானதை கவனித்துக் கொள்ளுங்கள்.

 

  • சுரைக்காய் ஜூஸுக்கு பதிலாக சுரைக்காய் சாப்பிட்டால் அவ்வளவு பலன் கிடைக்காது. நிச்சயமாக உணவில் சுரைக்காய் காய்கறியைச் சேர்க்க வேண்டும். ஆனால் நீங்கள் சுரைக்காய் சாறு குடிக்க அறிவுறுத்தப்பட்டால் அதைத் தவிர்க்க வேண்டாம்.

Bottle gourd juice for health

  • சுரைக்காய் ஜூஸ் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். அதன் அளவு உங்கள் செரிமானத்தைப் பொறுத்தது நிபுணருடன் விவாதித்த பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், ஒரு நாளைக்கு 1 கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

 

  • சுரைக்காய் சாற்றை கருப்பு உப்பு, கருப்பு மிளகு மற்றும் புதினாவுடன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் அதிக பலன்களைப் பெறலாம்.

 

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]