herzindagi
Main im

Cyclone Michaung : மழைக்கால நோய்களை எதிர்கொள்வது எப்படி?

மழை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் அவசியம். அதற்கான சில டிப்ஸ் இங்கே
Editorial
Updated:- 2023-12-12, 22:16 IST

சூரிய ஒளியின் பற்றாக்குறை மற்றும் ஈரப்பதமான வானிலை பல பருவகால நோய்களைக் உண்டாக்கும். மழைக்கால நோய்கள் காற்று, நீர் அல்லது கொசு கடியால் நோய்கள் பரவும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்கால நோய் தடுப்பு குறிப்புகள் மிகவும் எளிதானவை. வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • வெளியே செல்லும் போது மழையில் நனையாமல் இருக்கும் குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்லுங்கள்

 im

  • மழையில் நனைந்து ஈரமாகிவிட்டால் உங்களை உலர வைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்
  • மழைக்காலத்தில் குறைவாகத் தாகம் எடுத்தாலும் போதுமான தண்ணீர் அருந்தி நீரேற்றமாக இருங்கள்  
  • தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களுக்குச் செல்லும் போது கொசு விரட்டும் கிரீம்களை பயன்படுத்துங்கள்

 im

 

மேலும் படிங்க சென்னை மக்கள் கவனத்திற்கு! மழைக்கால நோய்களை தவிர்த்திடுங்கள்

  • வீட்டில் கொசு வலைகள் மற்றும் கொசு விரட்டியை பயன்படுத்தவும்
  • வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்
  • தேங்காய் மட்டைகள், வாகன டயர்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா எனப் பரிசோதிக்கவும், ஏனென்றால் இவை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள். 
  • தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தவும்

 im

மேலும் படிங்க சளி, இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வளிக்கும் பாட்டி வைத்தியம்!

  • வீட்டில் சமைத்த சத்தான உணவுகளை உண்ணுங்கள், பழங்களை நன்கு கழுவிய பிறகு சாப்பிடவும்
  • சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பிறகும் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவவும் 
  • தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்கவும்
  • காற்றில் பரவும் நோய்த் தொற்றுகளால் பாதிப்படையாமல் இருக்க மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும்

 im

  • உடலில் வைட்டமின் பி12 மற்றும் டி3 குறைவாக இருக்கும்போது வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]